உப்பில்லா பண்டம் குப்பையிலா?

Spread the love

உப்பிட்ட வரை உள்ளளவும் நினை’

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே”

என்று பல பழமொழிகள் தமிழில் உள்ளன. இவை உப்பின் தேவையையும் அவசியத்தையும் உணர்த்துக்கின்றன. ஆம். உப்பு அவசியம் தான்! உப்பு என்பது என்ன? உப்பின் நன்மை தீமைகள் யாவை? உப்பு ஏன்? எவ்வாறு? எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? உப்பு இல்லாமல் வாழ வேண்டிய நிர்பந்தம் இப்பொழுது இந்த அவசர யுகத்தில் பலருக்கும் ஏற்படுகின்றது. அவ்வாறு ஒரு அவசியம் ஏற்படின் எவ்வாறு உப்பில்லாமல் வாழ்வது என அறிந்து கொள்வது அவசியம்.

உப்பு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒரு தாதுப்பொருள். உப்பை அளவாக உபயோகிக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்களை வாரி வழங்குகின்றது. அதனையே அளவிற்கு அதிகமாக உபயோகிக்கும் பொழுது பல்வேறு உடல் நலக் கேடுகளை உண்டாக்கக் கூடியது.

உலகில் உப்பு இயற்கையாக கடல் நீரை உலர வைப்பதன் மூலமே பெறப்படுகின்றது. கடல் நீரை உலர வைப்பதன் மூலம் பெறப்படும் உப்பு ஸிஷீநீளீ ஷிணீறீt எனப்படுகின்றது. இதனைத் தான் நாம் தமிழில் கல்லுப்பு என்கிறோம். இந்த கல்லுப்பு தான் இயற்கையானது. இதில் சோடியம், குளோரின், மக்னீசியம், மங்கனீஸ், பொட்டாஷியம், போன்ற பல தாதுப்பொருட்களும் பல்வேறு இயற்கை சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இது சிறிது சுத்தக் குறைவானது. இயற்கையாக வெயிலில் உலர்த்தப்படுவதால் இதில் பல்வேறு தூசி அழுக்கு போன்ற தேவையற்ற பொருட்கள் கலந்திருக்கலாம். இது கடல் நீரிலிருந்து கடலோரங்களில் அதிகமாக வெயில் உள்ள பிரதேசங்களில் தயாரிக்கப்படுகின்றது. இவ்வகை உப்பு பெரிதும் கடல் நீரிலிருந்தே தயாரிக்கப்பட்டாலும் வட அமெரிக்க மாகாணங்களில் இது நிலத்தடி நீரிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது. இது நம் தமிழ் நாட்டில் தூத்துக்குடி வேதாரண்யம் போன்ற கடலோரப் பகுதிகளில் பெரிதும் காணப்படுகின்றது.

‘நைஸ் உப்பு’. இதுவும் இயற்கையானது தான் ஆனால் இது சுத்தம் செய்யப்பட்டது சுகாதாரமானது. இது கல்லுப்புக்கு உரிய அனைத்து குணங்களும் கொண்டது. சுத்தமானது இயற்கை தாதுப் பொருட்கள் நிறைந்தது.

உப்பு இயல்பான சோடியம் மற்றும் குளோரைடின் கலவை – ழிணீநீநீ. இதில் சோடியம் 40 சதவிகிதமும் குளோரின் 60 சதவிகிதமும் காணப்படுகிறது. 1920 களில் அமெரிக்காவில் பலரும் “நிஷீவீtக்ஷீமீ” எனும் தைராய்டு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர்.

எங்கும் விற்பனையாகின்றது. இது நைஸ் உப்பு போலவே இயற்கையானது. சுத்தமானது அனைத்து இயற்கை தாதுப் பொருட்களும் உள்ளடங்கியது. கூடுதலாக இதில் ஐயோடின் சேர்க்கப்படுவதால் இதில் ஐயோடின் காணப்படுகின்றது. இதில் சோடியம் குளோரைடு காணப்படுவதில்லை. மாறாக சோடியம் ஐயோடைட் காணப்படுவதில்லை. மாறாக சோடியம் ஐயோடைட் காணப்படுகிறது – ஷிஷீபீவீuனீ மிஷீபீவீபீமீ. இது தைராய்டு குறைபாடை சரி செய்யக் கூடியது. அதனால் இது ‘நிஷீவீtக்ஷீமீ’ எனும் தைராய்டு சுரப்பி வீக்கத்தை சரி செய்வதோடு உடல் போதுமான அளவு தைராய்டு உற்பத்தி செய்யவும் பயனுள்ளதாக அமைகிறது.

உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு தாதுப்பொருட்கள் காணப்படுகின்றது. இவை இரண்டும் உடலுக்கு மிக மிக அவசியமானவை. சோடியம் நரம்புகளுக்கு மிகவும் அவசியமானது. இந்த சோடியம் இருந்தால் தான் நரம்புகள் கட்டளைகளை மூளைக்கு அனுப்ப இயலும். மூளை அனுப்பும் கட்டளைகளைப் பெற்று அதன் படி செயல்பட முடியம். உப்பு குறைவாக உண்ணும் பொழுது அது நன்மைகளைத் தரும். அதுவே அதிகம் தரும் பொழுது உடலில் பல சீர்கேடுகளை உண்டாக்கும். கிட்னிகளுக்கு அதிக வேலைப்பளுவை உண்டாக்கி அவற்றை சிறுநீர் மூலமாக வெளியேற்ற முயற்சிக்கும். இதனால் உடலுக்கு அதிக நீர் தேவைப்படும். இதனைத் தானோ என்னவோ தமிழில் ‘உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்‘ என நம் மூதாதையர் பழமொழி வாயிலாக உணர்த்தியுள்ளனர்.

மீண்டும் மீண்டும் அதிகமாக உப்பு உண்ணும் பொழுது அது பல முறைகளில் தேவையற்ற உப்பை வெளியேற்ற முயற்சி செய்யும் அவ்வாறு உடல் முயற்சிக்கும் பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்கன்றது. பிவீரீலீ ஙிறீஷீஷீபீ றிக்ஷீமீssuக்ஷீமீ உண்டாகிறது. இதுவே நாளடைவில் இதயத்தை பாதிக்க ஆரம்பிக்கிறது. எனவே உப்பை குறைவாக சேர்த்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

இளவயதினரும் உப்பும்

பொதுவாக இளவயதினர் தங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்வதில்லை. 40 வயதை தாண்டும் பொழுது தான் மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க ஆரம்பிக்கின்றனர். இளவயதினர் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி ஓட்கல்களில் சாப்பிடுபவர்கள். பிட்சா, பப்ஸ் போன்ற பொருட்கள், பாக்கெட் ஸ்நாக்ஸ் போன்றவற்றை அதிகம் உண்ண விரும்பும் இளவயதினர் உப்பை அவசியம் குறைப்பது நல்லது. உலகில் சராசரியாக, ஆண்கள், நாள் ஒன்றிற்கு 9.7 ரீனீ உப்பும் பெண்கள் 7.7 ரீனீ உப்பும் உட்கொள்கின்றனர். இதில் பெரும்பாலான உப்பு அவர்கள் உண்ணும் இளவயதினர் தவிர்க்க முடியாத இடங்களில் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உட்கொண்டு பிற இடங்களில் உப்பு உண்ணுவதை குறைத்துக் கொள்ளலாம். 20 வயதைக் கடந்தவர்கள் இப்பொழுது முதலே உப்பை குறைத்துக் கொண்டால் உப்பால் வரும் பிற உடல் நல சீர்கேடுகளை தவிர்த்துக் கொள்ளலாம் அல்லது தள்ளிப் போடலாம்.

நீரிழிவு, இதயநோய், இரத்தக் கொதிப்பு உடையவர்கள் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது மிக மிக அவசியம். நீரிழிவு உடையவர்களுக்கு கிட்னிகள் அதிகம் செயல்பட வேண்டியிருக்கும். அவ்வாறு கிட்னி செயல்படும் பொழுது தான் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நிலையாக வைக்க முடியும். அப்படிப்பட்டவர்கள் அதிக உப்பை உட்கொள்ளத்தான் மேலும் அவர்களது கிட்னி செயல்பட வேண்டியதிருக்கும். அத்தகைய நீரிழிவு நோயாளிகளில் உப்பை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இதய நோய் உடையவர்கள் தங்களது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது அவசியம். அவர்களும் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அல்லது தவிர்ப்பது மிக அவசியம்.

தமிழில் அறுசுவை என்பது உப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு, கசப்பு போன்றவற்றை குறிக்கும். அதுவே மேலை நாடுகளில் 4 சுவைகளே பிரதானமாகக் கருதப்படுகிறது. அவை, உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு இவை நான்கிலும் மிகவும் முக்கியமானதானது உப்பு. உணவகங்களில் ஏன் உப்பு அதிகம் உபயோகிக்கப்படுகிறது என்றால் இதற்கு ஒரு தனி காரணம் உள்ளது. அதிகம் உப்பு சேர்க்கும் பொழுது உணவின் ருசி கூடுகிறது. உணவில் மறைந்துள்ள மணத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஆகையால் தான் மேற்கத்திய சமையலில் உப்பு திறீணீஸ்ணீuக்ஷீவீஸீரீ ணீரீமீஸீt ஆக பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையையும், நறுமணத்தையும் அது கூட்டுகிறது.


Spread the love
error: Content is protected !!