அளவான உப்பும்… புளிப்பும்…

Spread the love

உப்பு நமது அன்றாட வாழ்வில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்படுகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். வயிற்றில் அக்னி, உப்பின் உதவியால் தான் வளருகிறது.

மனித உடலுக்கு ஒரு நாள் தேவையான உப்பின் அளவு 1 கிராம். தினசரி நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறி போன்றவற்றின் மூலமே உடலுக்கு தேவையான உப்பின் அளவு கிடைத்து விடும் என்பதால் மேற்கொண்டு அதிக உப்பு சேர்க்க வேண்டியதில்லை.

அதிக உப்பு உடலில் என்ன விளைவு தரும்? 

அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரவும். உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம் சார்ந்த பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும். ஒரு சிலருக்கு உடலில் தங்கியிருக்கும் சோடியம் உப்பை வெளியேற்ற இயலாத காரணத்தால், தேங்கிய உப்பானது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் உப்பு இரத்த குழாய்களில் உட்புறத்தில் சிறிது சிறிதாக படிந்து உடல் முழுவதும் இயங்க உதவும் இரத்தம் முழுமையாக ஓடமுடியாமல் தடை செய்துவிடும். உடலில் இருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மகோதரம் போன்ற வியாதிகளில் உப்பு குடலின் வெளியே சவ்வுகளிடம் தேங்கிவிடும். இம்மாதிரி குழாய்களில் உப்பை முழுவதுமாக சேர்க்க உப்பில்லா வைத்தியம் மகோதரம் மற்றும் வேறு காரணங்களாலும் பயனிக்கும். அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். இதற்கு உப்பை குறைப்பது சிறந்ததாகும். உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற சருமம் சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். உப்பில்லாத உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால், தெளிவான மனநிலை ஏற்படும். வியர்வை தோன்றாது. உடல் அசதியை குறைக்கும். உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக்கொள்ளலாம். உப்பு சேர்க்காமல் தொடர்ச்சியாக பழகி வருபவர்கள் பால், மோர் மற்றும் இவை சார்ந்த சாதம் போன்றவற்றை சாப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவில் புளி சேர்ப்பதற்கு காரணம் அரிசி, துவரை, உளுந்து போன்றவை செரிமானமாக உதவுகிறது. குடலில் வாயுவையும், மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற புளி உதவுகிறது.

எலுமிச்சை, நாரத்தை போன்றவைகளும் புளிப்புக்காக உணவில் சேர்க்கப்படுகின்றது. அதிகளவில் புளியை சேர்ப்பதால்

மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் என்ன?

இரைப்பை நோய்கள் ஏற்படும் வயிற்றில் புண், செரிமான குறைபாடுகள், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. மேலும், சரும வியாதிகளும் ஏற்படலாம். எனவே புளி, எலுமிச்சை பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றை உணவில் தவிர்ப்பது நல்லது. பழுத்த புளியை ஒரு வருடங்கள் ஜாடியில் வைத்திருந்து உபயோகிக்கும்போது அனலில் இட்டு வாட்டிய பின்பு உபயோகிக்கவும். இதனால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக, புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது.


Spread the love
error: Content is protected !!