கேரட் பச்சடி

Spread the love

தேவையான பொருட்கள்:

கேரட்                     4

உப்பு                      -தேவையான அளவு

பச்சை பருப்பு            1டே.ஸ்பூன்

தேங்காய் (துருவியது)   2டே.ஸ்பூன்

கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)-1டே.ஸ்பூன்

பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது)-1

எலுமிச்சை பழச்சாறு   1டே.ஸ்பூன்

செய்முறை

கேரட்டை கழுவிய பிறகு துடைத்து, தோலை நீக்கவும், கேரட்டை துருவி ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, பச்சை பருப்பு, தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.

வெள்ளரிக்காய் தக்காளி பச்சடி

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்         2

தக்காளி                2

உப்பு                   -தேவையான அளவு

கொத்தமல்லி         1டே.ஸ்பூன்

பச்சைமிளகாய்       1

எலுமிச்சை பழச்சாறு-1டே.ஸ்பூன்

சர்க்கரை              1டீஸ்பூன்

செய்முறை

வெள்ளரிக்காயை கழுவி தோலை நீக்கவும். பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஒரு வடித்தட்டில் போட்டு அதன் சாற்றை வற்ற விடவும். பிறகு தக்காளிளை கழுவி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வெள்ளரிக்காயுடன் உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் (பொடியாக நறுக்கியது)-250கிராம்

உப்பு-தேவையான அளவு

கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)-1டீஸ்பூன்

பச்சை மிளகாய் (கீறியது)-2

கெட்டித்தயிர்      150மி.லி.

சாம்பார் வெங்காயம் (நறுக்கியது)-3டே.ஸ்பூன்

நல்லெண்ணெய்  1டே.ஸ்பூன்

கடுகு             1/2டீஸ்பூன்

கறிவேப்பிலை   5

பெருங்காயம்    1/2டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் நல்லெண்ணெய்யை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு போடவும். பொரிந்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் கொஞ்சம் சிவந்த பிறகு நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும். கலவை ஆறிய பிறகு உப்பு, கெட்டித்தயிர், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.

வெங்காய கேரட் பச்சடி

தேவையான பொருட்கள்:

வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2

கேரட் (துருவியது)  2

கொத்தமல்லி       1டே.ஸ்பூன்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)-2

கெட்டித்தயிர்        200மி.லி.

சர்க்கரை             1/2டீஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு-1டீஸ்பூன்

உப்பு                  -தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், கேரட், உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு, சர்க்கரை கெட்டித்தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.

உருளைக்கிழங்கு தக்காளி பச்சடி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு (வேகவைத்து தோல் நீக்கியது)-4

தக்காளி (பொடியாக நறுக்கியது)-2

கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)-1டே.ஸ்பூன்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)-2

சர்க்கரை               1/2டீஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு-1டீஸ்பூன்

உப்பு                  -தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குடன் தக்காளி, உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு, சர்க்கரை, கெட்டித்தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.

கருணைக்கிழங்கு பச்சடி

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு (தோல் நீக்கி, சிறியதாக நறுக்கியது)-250கி

வெல்லம்         200கி

கொத்தமல்லி கீரை (சிறியதாக நறுக்கியது)-1டே.ஸ்பூன்

பச்சை மிளகாய் (கீறியது)-4

கறிவேப்பிலை   8

மஞ்சள்           1டீஸ்பூன்

கடுகு             1டீஸ்பூன்

புளி (கோலி அளவு)-1

தண்ணீர்          2கப்

நல்லெண்ணெய்  1டே.ஸ்பூன்

உப்பு              -தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கருணைக்கிழங்கு, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். கருணைக்கிழங்கு நன்றாக வெந்ததும் தண்ணீரை நீக்கி விடவும். அதில் புளி கரைச்சல், வெல்லம், பச்சை மிளகாய், கொத்தமல்லி கீரை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக வேக வைக்கவும். (ஜாம் பதத்திற்கு வேக வைக்கவும்).

மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்யை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும். இவற்றை கருணைக்கிழங்கு கலவையில் சேர்த்து கிளறியதும் கருணைக்கிழங்கு பச்சடி தயார்.


Spread the love