Seeni thulasi uses in Tamil
சர்க்கரை துளசி அல்லது சீனித்துளசி ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இதனை ஆங்கிலத்தில் ஸ்டீவியா என்பர். சர்க்கரைத்துளசி மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரக்கூடியதாகும். இதற்கு இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரம் மட்டுமே ஏற்றதாகும். இரசாயன உரம் இடுதல் கூடாது. இதன் முதிர்ந்த விதைகள் கருப்பு நிறத்தில் மரக்கலரில் காணப்படும். இது 2 அடி முதல் 3 அடி வரை வளரக் கூடியதாகும். விதைகள் தன் மகரந்தச் சேர்க்கையால் உண்டாகும். முளைப்புத் திறன் மிகவும் குறைவாகும்.
இவற்றில் கலோரிகள் கிடையாது. இதன் உலர்ந்த இலையின் பொடி இனிப்பு சுவையுடன் காணப்படும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இலைகள் இனிப்புச் சுவையுடையது. செடி நட்டு மூன்று முதல் நான்கு வாரங்கள் சென்ற பின் அதன் கிளைகளை கிள்ளி விட இலைகள் அதிகரிக்கும். இவ்வாறு செய்வதால் பக்க கிளைகள் அதிகரித்து இலைகள் அதிகளவில் பெருகும்.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | சர்க்கரைத்துளசி |
தாவரப்பெயர் | STEVIA REBAUDIANA |
தாவரக்குடும்பம் | COMPOSITAE |
வேறு பெயர்கள் | HONEY LEAF, SWEET LEAF, SWEET HERB |
பயன் தரும் பாகங்கள் | இலை மற்றும் தண்டு |
இயற்கை விஞ்ஞானி Antonio berroni என்பவர் 1887ல் ஆம் ஆண்டு சர்க்கரை துளசியை கண்டுபிடித்துள்ளார். இது தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, தென் கலிஃபோர்னியா, மெக்ஸிகோ, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகளில் வளர்க்கப்படுகிறது. கனடா, கொரியா, தாய்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் சர்க்கரைக்கு பதிலாக சர்க்கரை துளசியை பயன்படுத்துகின்றனர். இது சீனி மற்றும் வெள்ளத்தை விட அதிகளவு இனிப்புத் தன்மை உடையது.
சர்க்கரை துளசியில் இருந்து எண்ணெய்கள், மாத்திரைகள் எடுக்கப்படுகின்றது. இது பச்சை இலையாக மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள நல்ல மூலிகையாகும்.
ஊட்டச்சத்துக்கள்
சர்க்கரை துளசியில் மெக்னீசியம், கால்சியம், சோடியம், வைட்டமின், மினரல்ஸ், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்
இயற்கையாக எளிதில் கிடைக்கும் துளசியில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இது பிளட் சுகர், இரத்த அழுத்தம் குறைவாக காணப்படுதல், வயிற்றுப்போக்கு மற்றும் சிறு வியாதிகள் போன்றவை குணமடைய பயன்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் இது வயிற்று உப்பல் மற்றும் பல நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
சீனி துளசி பயன்படுத்துவதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீனி துளசி இலையை தொடர்ந்து உண்டு வரலாம். இது மாத்திரை மூலம் கட்டுப்படுத்த முடியாததை விரைவில் கட்டுப்படுத்தும் தன்மை உடையதாகும்.
சர்க்கரை துளசி இலையை நீரில் ஊறவைத்து அந்நீரை மறுநாள் பருகலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நீரழிவு நோய் வராமல் பாதுகாக்கலாம்.
சரும ஆரோக்கியத்திற்கு
துளசி இலையை எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். இந்த விழுதை படை. சொரி ஏற்பட்ட சரும பகுதியில் தடவி வர விரைவில் குணமடையும்.
சர்க்கரைத் துளசி பயன்படுத்தும் முறை
சர்க்கரைத் துளசி இலையை எலுமிச்சை சாறு அல்லது உப்பு கலந்த நீரில் நன்கு அலசவும். பின் 50 கிராம் பொடியுடன் 200 மில்லி நீர் ஊற்றி அதனை பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். சீனி துளசி லிக்யூடு தயார். இதனை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
இதனை டீ அல்லது காபி தயாரிக்கும் போது அதில் 2 டீஸ்பூன் அளவு பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கும் சூழலில் இந்த சீனித்துளசி சர்க்கரை நோயாளிக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இதில் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
குறிப்பு
இதன் இலைகளை வெயிலில் 8 மணிநேரம் உலர வைத்து பாதுகாக்க வேண்டும். முதிர்ந்த இலைகளை பொடியாக அரைத்து கண்ணாடி குடுவையில் பாதுகாக்கலாம்.
ஆயுர்வேதம்.காம்