மிகு உடற்பருமன் & உயிருக்கு ஆபத்தா?

Spread the love

அண்மைக் காலமாக அளவிற்கு அதிகமான உடற் பருமன் சர்க்கரை நோய், இரத்த உயர் அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்ற பல நோய்களை உண்டு பண்ணுவதால் பல நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தாக வந்து முடிகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

மிகு உடற்பருமன் என்பது மருத்துவ முறையில் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு உடற் குறைபாடாகும். இதனால் மனிதர்களின் வாழ்நாள் கணிசமாகக் குறைகிறது என்று ஆய்வுகள் பலவும் தெரிவிக்கின்றன.  B.M.I. என்று சொல்லப்படுகின்ற Body Mass Index  ன் அடிப்படையில் உடற்பருமன் தீர்மானிக்கப்படுகிறது.    B.M.I.  = (Kg/m2)என்ற சூத்திரத்தின் மூலம் தீர்வு செய்யப்படுகிறது. 25kg/m2 அளவில் உங்கள் B.M.I. இருந்தால் நீங்கள் சரி எடை கொண்டவராவீர்கள்.   என்ற அளவைத் தாண்டும் போது உங்கள் எடையைக் குறைக்கத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.

B.M.I. = 18.50 & 24.99 வரை சரி எடை

25.00 & 29.99 மிகு எடை.

30.00 & 34.99 வரை கிளாஸ் 1 அதிக பருமன் மிக்கவர்.

35.00 & 40.00 வரை கிளாஸ் 2 அதிக பருமன் உள்ளவர்.

பருமனுக்கு காரணங்கள்.

மாவுச் சத்துப் பொருள்கள் உண்பது.

உடற்பயிற்சி இன்மை.

ஹார்மோன் குறைபாடுகள் / ஏற்ற இறக்கம், மாதவிலக்கு நிற்கும் நேரக் குறைபாடுகள்.

வலிப்பு மருந்துகள்,  நோய்கான மருந்துகள், மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள்

கர்ப்பத் தடை மாத்திரைகள்.

இயல்பான குடும்பப் பாரம்பரியம்.

தற்காலத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருத்துவங்கள்.

பசியை குறைக்கும் மருந்துகள்.

உணவுச் சத்திலுள்ள கொழுப்புகள் உடலில் சேராது தடுக்கும் மருந்துகள்.

ஹார்மோன் மருத்துவம்.

H.C.G. என்னும் உடலில் சுரக்கும் Human Chronic Gonadotropin  மருந்தை மிகச் சிறிய அளவில் உடலில் செலுத்துதல். இதனால் ஒன்றிரண்டு மாதங்களில் 5 முதல் 10 கி.கி.எடை குறையக் கூடும்.

கொழுப்பை உறிஞ்சி எடுத்தல் (Lipo Suction) இம்முறையில் உடலில் கொழுப்பு மிகுந்திருக்கும் இடங்களில் இருந்து கொழுப்பை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்தல், தொடை, அடி வயிறு, பிட்டம் போன்ற பகுதிகளில் உள்ள மிகு கொழுப்பை உறிஞ்சி எடுத்தல் ஒரு தடவையில் 5 முதல் 7 A.A.வரை கொழுப்பை நீக்க முடியும்.

அளவிற்கு மிக அதிகமான எடை உள்ளவர்களுக்கு (morbidobisity ) Bariatric Surgery என்றும் அறுவை சிகிச்சை மூலம் 20 முதல் 30 கிலோ வரை எடையை நீக்க முடியும்.

எனவே மிகு எடை உள்ளவர்கள் மனந்தளர்ந்து போக வேண்டாம். தக்க மருத்துவர்களை அணுகிச் சிகிச்சை செய்து கொள்ளலாம்.


Spread the love