ஆமவாதம் (Rheumatoid Arthritis)

Spread the love

எகிப்து நாட்டின் மம்மிகளில் (Egyptian Mummies) கூட, பண்டைய நாட்களில் இவ்வகை ஆர்த்ரைடிஸ் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இவ்வகை ஆர்த்ரைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ, குளிர் பிரதேசங்கள், மலைகளில் வசிப்பதாலோ, உடலை அதிகக் குளிருக்குட்படுத்திக் கொள்வதாலோ, மற்றும் பரம்பரைக் காரணத்தினாலோ இது ஏற்படலாம். 100 மனிதர்களில் ஒருவருக்கு வருகிறது.

ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid Arthritis) பெரும்பாலும் கால் மூட்டுக்களையும் கை விரல்களையும் தான் முதலில் பாதிக்கிறது. பின்னர் தோள்பட்டை, மணிக்கட்டு, முழங்கை மூட்டு போன்றவற்றிற்குப் படிப்படியாக பரவுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எல்லா மூட்டுகளுமே ஒட்டு மொத்தமாக வீக்கத்திற்குட்பட்டு அழற்சியை அதிகப்படுத்தி விடுகின்றன. வலி அதிகமாக இல்லாவிடினும், உடல் இயக்கத்திற்கு மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மிகப் பெரிய மூட்டுக்களான பந்துக்கிண்ண மூட்டு, கைமூட்டு போன்றவற்றில், அதிக அளவு பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் வெப்பத்தையும், சிவந்த தோற்றத்தையும் உண்டாக்கி விடுகின்றன. எலும்புகளின் கோளாறை எக்ஸ்ரே செய்து பார்ப்பதன் மூலம் தெளிவாக அறியலாம். நரம்பிழை (Tendon) மற்றும் தசை நார்களில் ஏற்படும் கடுமையான அழுத்தம் கூட ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் தோன்ற வழி வகுக்கலாம்.

அழற்சி

ஆமவாதத்தின் முக்கிய பாதிப்பு ஆங்கிலத்தில் Inflammation  என்று சொல்லப்படும் அழற்சி. நாட்பட்ட தீவிர acute inflammation ஏற்பட்டால் அழற்சியில் வலி, சூடு, சிவந்து போதல், வீக்கம், பாதிக்கப்பட்ட இடம் செயலற்று போதல் இவை இருக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக ரத்தம் பாய்வதற்கு உதவும். ஆனால் நாட்பட்ட அழற்சியில் இந்த நிவாரணமும் இருக்காது. ஆமவாதத்தில் மூட்டுகளின் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்படும். எலும்புகளின் சிதைவு நோய் வந்த முதல் அல்லது இரண்டாம் வருடத்திலேயே ஆரம்பிக்கும். எனவே ஆமவாதத்தை சீக்கிரம் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் ஆமவாதத்தை உறுதிப்படுத்தும்

  1. குறைந்த பட்சம் 3 மூட்டுகள் பாதிக்கப்படும். வீக்கம் தோன்றியிருக்க வேண்டும். கை எலும்புகள், விரல்களின் மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • தோலடியில் சிறிய வீக்கங்கள் (Nodules) தோன்றுதல்
  • காலையில் கால்கள் ‘கல்’ போல் விறைப்பாக இருத்தல் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், அதுவும் 15 நாட்களுக்கு தொடர்ந்தால்
  • பாதிக்கப்பட்ட இடங்களில் சீரான வீக்கம் காணப்படும்.
  • இரத்தப் பரிசோதனையில் Rheumatic factor இருந்தால்
  • எக்ஸ் – ரே மூலம் பழுதடைந்த பாகத்தை பரிசோதித்தல்

காரணங்கள் / அறிகுறிகள்

  1. “ஆடோ இம்யூன்” நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்கள், தவறுதலாக, நல்ல செல்களையே எதிரி என்று நினைத்து அழித்து விடுவது. இந்த தவறு எப்படி ஏற்படுகிறது என்பது சரிவர தெரியவில்லை. மூட்டுகளில் ‘அசுர’ ஸினோவியல் செல்கள் உருவாகி, மூட்டு ஜவ்வு, எலும்புகளை அழித்து விடும். தேய்மானம் ஏற்பட்டு வலி, அங்கவீனம் உண்டாகும். இந்த வேலியே பயிரை மேயும் நிலை, இந்த வியாதியின் பெரிய பிரச்சனையாகும்.
  • மூட்டுக்களில் (இரண்டு எலும்புகளுக்கு இடையே), உதாரணமாக தொடை எலும்பும் முழங்கால் எலும்பும் சந்திக்கும் இடமான முழங்கால் மூட்டிலே, உள்ள கார்டிலேஜ் (Cartillage) ஒரு ‘குஷன்’ போல், குனிந்து, நிமிர்ந்து, நடக்கும் போதெல்லாம் ஏற்படும் அதிர்ச்சியை ஏற்றுக் கொண்டு விடும். இதில் இருக்கும் புரதம் குறைந்தால் இந்த ஜவ்வு தேய்ந்து போகலாம். உராய்வுகளை வழவழப்பாக ஆக்க, சினோவியம், மூட்டு திரவத்தை சுரக்கிறது. மேலே சொன்ன ‘ஆட்டோ இம்யூன்’ தவறினால், சினோவியம் பாதிக்கப்பட்டு, வீங்கிவிடுகிறது. அதன் திரவம் கெட்டியாகி, விடுகிறது. அதிகமாக திரவத்தை, தேவையின்றி சுரந்து விடும். இதனால் வீக்கம், வலி, விறைப்பு, இவை ஏற்படுகின்றன. மூட்டு சிவந்து விடும். இது முதல் கட்டம். இதில் நடக்கும் போதும் மூட்டுவலி ஏற்படும். மூட்டில் வீக்கம், தொடர்ந்த வலி இரண்டாம் கட்டம். காலை தூக்கினாலே வலித்தால் 3ம் கட்டம். ஒய்வாக இருக்கும் போதே வலித்தால் 4 வது கட்டம்.
  • முதலில் 2,3 மூட்டுக்களில் ஆரம்பித்து, நிதானமாக பரவுகிறது. இதன் தீவிரம், பாதிப்பு, மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். முதலில் தாக்கப்படும் மூட்டுக்கள் – விரல்களின் நடு கணுக்கள், மணிக்கட்டு, கால் விரல்களின் அடிபாதம், தோள் பட்டை, முழங்கால், முழங்கை, கணுக்கால்.
  • சோகை உண்டாகும்.
  • கழுத்து வலி, வாய், கண்கள் உலர்ந்து போதல்.
  • மூட்டு வலி, மூட்டுக்களில் வீக்கம், வேதனை தவிர, உடல் எடை குறையும்.
  • காலையில் தொடை, கால்கள் விறைத்திருக்கும். 30 நிமிடத்துக்கு மேல் நீடித்திருந்தால் மூட்டு வியாதியின் அறிகுறி.
  • ஆமவாத முடிச்சுகள்
  • பசியின்மை, எப்போதும் சோர்வு.
  1. தசை பலவீனம், நடப்பது.
  1. மலச்சிக்கல், தூக்கமின்மை, தலைச்சுற்றல் வாந்தி.
  1. ஜுரம் வரலாம்.
  1. தற்காலிகமாக உடல் எடை குறையலாம்.

ஆயுர்வேத அணுகுமுறை:-

ஆயுர்வேதத்தின் படி மூட்டுவலிகளின் முதல் ஆரம்பம் அஜீரணத்துடன் இதனால் தான் மூட்டு வலியை ‘ஆமவாதம்’ என்கிறது. ஆமா என்றால் ஜீரணிக்கப்படாத உணவு. இந்த அஜீரணம் ஏற்பட காரணம், உடல் உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது.

ஆமாநச்சை நீக்க

ஆமவாதம் பாதித்த மூட்டை சுத்திகரிக்க, நச்சை குறைக்கும் மூலிகைகள் செறிந்த நீரை பருகலாம். 2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, ஒரு ஃப்ளாஸ்கில் (Thermos flask) ஊற்றி வைக்கவும். இத்துடன்

1.    இரண்டு மெல்லிய இஞ்சி துண்டுகள்

2.    கால் தேக்கரண்டி ஜீரகம்

3.    கால் தேக்கரண்டி பெருஞ்சீரகம்

4.    இரண்டு மிளகு மற்றும்

5.    இரண்டு புதினா இலைகள்

இவற்றை ஃப்ளாஸ்கின் தண்ணீரில் அமிழ்த்தி ஊறவைக்கவும். இதை நாள் முழுவதும் குடித்து வர, உடல் நச்சுப் பொருட்கள் நீங்கும்.

‘ஆமா’ வை போக்க, சாம்பார் / மசாலா பொடி போல, மூலிகை பொடி தயார் செய்து கொள்ளவும். இதற்கு தேவையானவை

  1. ஒரு பாகம் கருமிளகு, ஒரு பாகம் ஓமம்
  • இரு பாகம் வெந்தயம், மஞ்சள் (தனித்தனியான அளவில்)
  • 6 பாகம் சீரகம், பெருஞ்சீரகம் – இவற்றை பொடித்து பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தின் படி மூட்டுக்களில் திரவம் இருப்பதால் அவை ‘கபத்தின்’ ஸ்தானங்கள். ஜீரணிக்கப்படாத கழிவுகள், “வாயுவால்” மூட்டுகளில் சேர்க்கப்படுகின்றன. அதிகமாக சேர்ந்து, வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். வாயு அதிகமானால் பாதிப்புகள் ஏற்படும். வாயு அதிகமாக காரணங்கள் அதீத உடற்பயிற்சி, பட்டினி இருப்பது, விபத்து, எலும்பு முறிவு, ராத்திரி தூங்காமல் அதிக நேரம் விழித்திருப்பது, இயற்கை உந்துதல்களை அடக்குவது, கவலை, குளிரின் பாதிப்பு.

ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான வாகபட்டர் எலும்புகளை பற்றி விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். எலும்புகள் மேதோ தாதுவால் போஷாக்கை பெருகின்றன. மேதோதாதுக்கள் கொழுப்புப் பொருள்கள். வாயு / வாதக் கோளாறுகளால் எலும்பு நோய்கள் உண்டாகின்றன. வாதம் என்றாலும் வாய்வு என்றாலும் ஒன்று தான். வாகபட்டர் எலும்புகளை 5 பிரிவுகளாக பிரித்து மொத்த எலும்புகளை 163 ஆக கணித்தார். மூட்டுகளில் கபத்தின் எண்ணைப் பசை குறைத்து, வாத வறட்சி ஏற்படும் போது மூட்டு தேய்மானம் ஏற்படும். வாத தோஷம் அதிகமானால் எலும்புகள் சுலபமாக உடையும் தன்மையை அடைகின்றன.

குளிர்காலத்தில் வாயு அதிகரிக்கும். அதீத கவலை இயற்கை வேகங்களை தடை செய்தல், இரவில் நெடுநேரம் கண் விழித்திருப்பது, குளிர்காற்று இவையெல்லாமும் வாயுவை அதிகரிக்கும். இந்த காரணங்களால் ஏற்படும் வாத / வாய்வு தோஷம் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் போன்ற மூட்டு நோய்களை உண்டாக்குகின்றன. வாயுவுடன், ஆமா என்னும் ஜீரணிக்காத கழிவுப் பொருளும் சேர்ந்து விட்டால், அது ‘ஆம வாதமாக’ (Rheumatoid arthrities) உருவெடுக்கிறது. ‘கவுட்டும்’ ஆமவாதத்துடன் சேர்ந்தது தான் இவை மூன்றும் முக்கியமாக வாயு தோஷத்தால் ஏற்படுபவை. இதர தோஷங்களும் (கபம், பித்தம்) தனியாகவோ, வாயுவுடன் சேர்ந்தோ, வாதநோய்களுடன் சம்மந்தப்படுகின்றன.

ஆயுர்வதே சிகிச்சை முறைகளின் அணுகு முறை

1.    வலியை போக்குதல்

2.    மலச்சிக்கல் அஜீரணத்தை போக்குதல்

3.    மசாஜ் – மூலிகை எண்ணைகளால் மசாஜ் செய்வது.

4.    நடமாட்டம் முடங்கியிருந்தால் அதை சீர் செய்வது.

5.    உள் மருந்துகள், வெளிப்பூச்சுக்களுக்கான தைலம்

6.    வாழ்க்கை முறை மாற்றங்கள்

7.    பத்தியம்.

ஆயுர்வேத சிகிச்சை முறை:-

பொதுவாக கீழ்கண்ட சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன.

1.    மருந்துகள்

2.    அப்யங்கா (மசாஜ்)

3.    ஸ்வேதனா (ஒத்தடம் கொடுப்பது)

4.    உணவுக்கட்டுபாடு

5.    யோகா

6.    ஓய்வு

இவை தவிர தேவைப்பட்டால், நவரக்கிழி, பிழிச்சல், தாரை, வாபனா வஸ்தி (எனிமா) இவை செய்யப்படும். இவற்றால் தசைகள் வலுப்படும்.

வீட்டு வைத்தியம்

(அ) ஒத்தடம்:-

  1. புங்க இலைகளால் (Pongamia pinnata) தயாரிக்கப்பட்ட சூடான கஷாயத்தால் ஒத்தடம் தருவது.
  • கோதுமை தவிட்டை ஒரு துணியில் “கிழி” யாக கட்டிக் கொள்ள வேண்டும். கற்பூராதி தைலம் அல்லது தந்தூராதி தைலம் இவற்றில் ஒன்றை, இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, தவிட்டு கிழியை அதில் தேய்த்து, சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் போது, வலியுள்ள பாகங்களில் ஒத்தடம் கொடுக்கவும். 15 நிமிடம் இந்த ஒத்தடம் கொடுக்கவும்.
  • முருங்கைக் கீரை, எருக்கினிலை, புளியிலை, நொச்சியிலை (Vitex Negundo) இவற்றை சமபாகம் எடுத்து, துருவிய தேங்காயும் (சமபாகம்) சேர்த்து இரும்புச் சட்டியில் வாட்டி, தவிட்டுக்கு பதிலாக, இவ்விலைகளை துணிக்கிழியில் கட்டி, மேற்சொன்ன விதத்தில் உபயோகிக்கலாம்.
  • இடித்த புளியிலை அல்லது வெறும் வெந்நீரையோ, பொறுக்கும் சூட்டில் வீக்கமுள்ள இடத்தில் ஊற்றவும். இவ்வாறு தினம் 2 – 3 – 4 தடவைகள் செய்யலாம்.
  • புளி இலைகளை வெந்நீரில் ஊறவைத்து, மாவு போல் மசித்து, இந்துப்பு சேர்த்து, வீக்கமுள்ள இடங்களில் பற்று போடலாம்.
  • ஆடாதோடை (Adhatoda Vasica) இலைகளை வெந்நீரில் வேகவைத்து, ஒத்தடம் கொடுக்கலாம்.
  • ஆமணக்கு கஷாயத்தை வீக்கமுள்ள இடங்களில் தெளிக்கவும். அல்லது ஆமணக்கு எண்ணையை வலியுள்ள இடத்தில் பூசி, நன்றாக தடவவும். இதன் மேல் சூடாக ஒத்தடம் கொடுக்கவும். ‘ஆமா’ என்கிற மூட்டினில் தங்கியிருக்கும் கழிவு / நச்சுபொருளை நீக்க ஆமணக்கு எண்ணை சால சிறந்தது.
  • பொடி செய்த பாறை உப்பு, மணல் இவற்றை சமபாகம் எடுத்து, வாணலியில் சூடாக்கி, துணிப்பை அல்லது துணிக்கிழியில் போட்டு கட்டி, ஒத்தடம் கொடுக்கவும்.
  • பாகல் ஜுஸை மூட்டுக்களில் தடவலாம்.
  1. கடுகை களிம்பாக அரைத்து மூட்டுக்களில் தடவலாம்.

(ஆ) உள்மருந்துகள்:-

1.    பாகல் பழங்களை உப்பு, இஞ்சியுடன் வேகவைத்து, உணவுடன் உண்ணலாம்

2.    கொள்ளு (Dolichos biflorus) சூப் வாதத்தை கண்டிக்கும். உடல் எடை குறைய உதவும்.

3.    உலர்ந்த இஞ்சி (சுக்கு), தனியா (கொத்தமல்லி விதை) இவற்றின் கஷாயம் வாதத்தை உண்டாக்கும் அஜீரணத்தை போக்கும். கூட ஆமணக்கு எண்ணை சேர்த்துக் கொண்டால் ரூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸீன் வலியை போக்கும்.

  • உலர்ந்த இஞ்சி (சுக்கு), நெரிஞ்சி (கோக்ஸுர் – Tribulus Terrestris) இவற்றினால் தயாரிக்கப்பட்ட கஷாயம், அஜீரணத்தை போக்கும். இதை காலையில் குடிக்க வேண்டும். அஜீரணம் குணமானால் ஆமவாத பாதிப்புகள் குறையும்.
  • வேப்பிலை சாறு, பால் சேர்த்து பருகினால் ஆமவாத வலி குறையும்.

ஆயுர்வேத மருந்துகள்:-

ஆயுர்வேதத்தில் பல நல்ல மருந்துகள் ஆர்த்தரைடீஸ் வியாதிகள் பலவற்றை போக்க, பயன்படுகின்றன. கீழே சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. நீங்களாகவே இந்த மருந்துகளை வாங்கி உபயோகித்தால் தலைவலி போய், திருகு வலி வந்தால் போல் ஆகும். ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உபயோகிக்கவும்.

வெளிப்பூச்சுக்கான தைலங்கள்:-

மஹாநாராயண தைலம், சைந்தாதி தைலம், பிண்ட தைலம், ஆமவாத தைலம், பலாகுடிச்யாதி தைலம், பலாக்வகந்தாதி தைலம், பிரபஞ்ஜன விமர்தன தைலம், பூனாக தைலம், தன்வந்த்ர தைலம், ஷீராபாலா தைலம், விஷமுஷ்டி தைலம்.

மருந்துகள்:-

மஹாயோக ராஜ குக்குலு ஒரு சிறந்த மருந்து. தவிர ப்ருஹத் வட்சிந்தாமணி ரஸ, த்ரிபால சூரணம், பலாரிஷ்டம், வாதவித்வம்ஸினீ ரஸ, வாத கஜாங்குஸ ரஸ, வாத ராஷஸ, ஸ்வர்ணவாத ராக்ஷஸ.

ப்ருஹத் வட்சிந்தாமணி ரஸ மருந்துடன் மஹா ரஸ்னாதி க்வாத் என்ற மருந்தும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

உணவு கட்டுப்பாடு:-

வயிற்று கோளாறுகள் மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு – இவற்றுக்கு முக்கிய காரணம். எனவே லகுவான, கொழுப்பில்லாத, உணவுகளை உண்பது சிறந்தது. மூட்டுவலிக்கு ஏற்ற உணவுகள் தனியே தரப்பட்டுள்ளன.

இதர குறிப்புகள்:-

1.    மூட்டுகளில் வலியை உண்டாக்கும் வேலை, செயல்களை பயிற்சிகள் இவற்றை தவிர்க்கவும்.

2.    சரியாக, உட்கார வேண்டும்; மற்றும் நிற்க வேண்டும்.

3.    உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் எடையை குறைக்கவும்.

4.    ‘கெட்டியான’ படுக்கையில் படுக்கவும்.

5.    மலச்சிக்கல், அஜீர்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

6.    ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் நோய் தீவிரமாக தாக்கும் போது முழு ஒய்வு தேவை.

உடற்பயிற்சி, யோகா:-

ஆர்த்தரைடீஸ் வியாதிகள் வராமல் தடுக்க உடற்பயிற்சியும், யோகாவும் சிறந்தவை. ஆனால் ருமாடிஸம் வந்தபின், உடற்பயிற்சி, யோகா, இவற்றை டாக்டரிடம் கலந்தாலோசித்து பின் மேற்கொள்ளவும்.

இதர மருத்துவங்கள்:-

அலோபதி மருத்துவ முறையிலும் பல மருந்துகள் உள்ளன. இருந்தாலும் இவற்றில் பல, பக்க விளைவுகளை உண்டாக்கும். அழற்சியை எதிர்க்கும் NSAID(Non Steroid Anti Inflammatory) மருந்துகளும், கார்டிகோஸ்டீராய்ட் மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. முதல் வகையை சேர்ந்த ழிஷிகிமிஞி மருந்துகள் ஆஸ்பிரின், ஐபூஃப்ரோஃபென் (Ibu profen), பாராசிடமால் (Paracetamol) போன்ற பல

மருந்துகள். இவை தவிர “தங்கம்” கலந்த மருந்துகளும் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. தங்கம் “இன்ஜெக்ஷன்” ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும்.

இதனால் வாய்புண், அரிப்பு, ரத்த கோளாறுகள், சரும பாதிப்புகள் – இவை உண்டாகும். இந்த தங்க மருந்தின் வியாபார பெயர் மையோக்ரிஸின் – Myocrisin. தற்போது இந்த தங்க மருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

சில பரிசோதனைகள்

·     ருமாடிக் ஃபேக்டர் டெஸ்ட்

·     இரத்தத்தின் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை

·     ணிஷிஸி – இரத்தத்தின் எரித்ரோசைட் செல்கள் ‘படிவ’  டெஸ்ட் (Erythrocyte

·     Sedimentation test)

·     ‘சி’ ரீஆக்டிவ் புரதம் (சி – reactive protein)

·     எக்ஸ்ரே

குறிப்பு

இந்த ருமாடிக் ஃபேக்டர் காணப்பட்டாலும் சிலருக்கு ஆமவாதம்

ஏற்படுவதில்லை.

ஆமவாதத்திற்கும் இதர வாதங்களுக்குமுள்ள வித்யாசங்கள்:-

  1. ஆமவாதம் மற்ற வாத நோய்களை விட அதிகம் பரவியுள்ள வியாதி.
  • மூட்டுகள் மட்டுமன்றி உடல் முழுவதிலும் பாதிக்கும்.
  • ஆமவாத காரணி (Rheumatic factor) என்னும் “பொருள்” ரத்தத்தில் இருப்பது ஆமவாதத்திற்கு மட்டும் உள்ள விசேஷம். இதை இரத்தப்பரிசோதனையால் கண்டுபிடிக்க முடியும்.
  • ஆஸ்டியோ – ஆர்த்ரைட்டீஸில் பளு தாங்கும் மூட்டுக்கள் பாதிக்கப்படும். உதாரணம் முழங்கால், கணுக்கால், நோய் தீவிரமாகும் போது இதர மூட்டுக்களுக்கு பரவும்.
  • ஆமவாதம் அசையும் செயல்பாடுகளை பாதிக்கும். ஆஸ்டியோ – ஆர்த்ரைட்டீஸில் அசைவுகள் வலியை உண்டாக்கும்.
  • ஆமவாதம் எந்த வயதினரையும் தாக்கும். இதர ஆர்த்ரைட்டீஸ் வியாதிகளான ஆஸ்டியோ – ஆர்த்ரைட்டீஸ், கவுட் இவைகள் சாதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்டவரை தாக்கும்.
  • மூட்டுக்கள் வீங்குதல், அவயங்கள் பின்னமடைதல், கோணலாக பின்னிக் கொள்தல், சிதைந்து போதல். இவை ஆமவாத அறிகுறிகள்.

ஆமவாதம், சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அங்கஹீனத்தை உண்டாக்கிவிடும். மேலும் பல சிக்கல்கள் ஏற்படும். எனவே வாத அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். பொதுவாக ஆமவாதம், ஏன் ஆர்த்ரைடீஸ் வியாதிகள், பூரணமாக குணப்படுத்த முடியாதவை.

ஆமவாத தைலம்

தேவையானவை: கோஷ்டம் (Saussurea Lappa), சுக்கு, வசம்பு, முருங்கை பட்டை, தோல் நீக்கிய பூண்டு, தேவதாரு, வெண்கடுகு – இவை வகைக்கு 18 கிராம் இவற்றை அரைத்தெடுத்து புளிச்சாறு 3 லிட்டர், புளித்த தயிர் 3 லிட்டர், நல்லெண்ணை 11/2 லிட்டர் சேர்த்து காய்ச்சவும். கல்கம் மெழுகுபதத்தில் வரும் போது 1 கிராம் வெள்ளை குங்கிலியத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, இந்த பாத்திரத்திலேயே தைலத்தை வடித்து சேர்த்துக் கொள்ளவும். கலக்கினால் குங்குலியமும் கரைந்து விடும். ஆமவாதத்திற்கும் ஸியாடிகாவுக்கும் இந்த தைலம் வெளிப்பூச்சாக நல்ல பலனளிக்கும்.

ஆமவாத ஜுரம் – (Rheumatic fever)

ஆமவாதம் ஜுரத்தை உண்டாக்கும். இந்த ஜுரம் பெரும்பாலும் சிறுவர்களையும் இளவயது உடையவர்களை தாக்கும். நான்கு வயதிலிருந்து 18 வயது வரை உள்ளவர்களை தான் பொதுவாக இந்த ஜுரம் பாதிக்கிறது.

மூட்டுக்களை மற்றுமின்றி, இதயத்தையும் பாதிக்கும் ருமாடிக் ஜுரம், தொண்டையில் ஸ்ட்ரெப்டோகாகல் (Streptococcal) தொற்றால் ஆரம்பிக்கிறது. இந்த பாக்டீரியாவால் உண்டாகும் அழற்சி, வீக்கம் இவற்றுக்கு எதிராகத் தான் ருமாடிக் ஜுரம் உண்டாகிறது. பல பேர் இந்த ஜுரத்திலிருந்து மீண்டாலும் சிறுபான்மையோரின் இருதயம் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். தவிர ஜுரம் மீண்டும் தோன்றலாம்.

காரணங்கள் / அறிகுறிகள்

ஆமவாத ஜுரம் உடலின் பல பாகங்களை – மூட்டுகள், இருதயம், தோல் – தாக்கும். தொண்டை பாதிப்பு தொடங்கி ஒய்ந்தவுடன், குளிர், பின் ஜுரம் இவை முதல் அறிகுறிகள். மூட்டுகள் சிவந்து, சூடாகி, வீக்கமடையும். நீர் கோர்த்துக் கொள்ளும். மார்பு வலி, அதிக இதய துடிப்பு, தூக்கிப்போடுதல் ஏற்படும். மூட்டுவலி மிதமாகவும் இருக்கலாம் இல்லை தீவிரமாக இருக்கலாம். ஒரு மாதம் வரை நீடிக்கலாம். சில சிறுவர்களுக்கு வேகமான இதயத்துடிப்பு, வேறு சிலருக்கு மார்வலி ஏற்படும். இதய பாதிப்பினால் களைப்பு மூச்சுத்திணறல், வாந்தி, பிரட்டல், வயிற்றுவலி, இருமல் இவை தோன்றும்.

ஆமவாத ஜுரம் இதய வால்வுகளை சீரழிக்கும். மூட்டுக்கள் மரத்துப் போய் வலி இருக்கும். ஜுரம் 39.4 டிகிரி  சென்டிகிரேட் இருக்கும். பசி இருக்காது. மலச்சிக்கல் இருக்கும்.

சூடான ஒத்தடம் மூட்டு வீக்கம், வலியை குறைக்கும். மணல் (அ) உப்பை சிறு மூட்டை போல் துணியில் கட்டி, சூடாக ஒத்தடம் கொடுக்கலாம். பெருங்காயம் கலந்த மருந்துகள், ஆமவாதாரி ரஸ்£, சௌபாக்கிய வடி, போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் குணமளிக்கும். உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்வது பயனளிக்கும்.

ஆமவாதம்

ஆர்த்ரைடிஸ், அடையாளங்கள், ஆர்த்ரைடிஸ், ஆண்களைக், பெண்களையே, தாக்குகிறது, நாற்பது, உணர்ச்சி, உடலை, வருத்திக், குளிர், பிரதேசங்கள், மலைகளில், வசிப்பதாலோ, உடலை, பரம்பரைக், காரணத்தினாலோ, ருமெடாய்டு, ஆர்த்ரைடிஸ், கால், மூட்டுக்களையும் கை, விரல்களையும், பாதிக்கிறது, தோள்பட்டை, மணிக்கட்டு, முழங்கை, மூட்டு பாதிக்கப்பட்ட, மூட்டுகளுமே, மொத்தமாக, வலி, உடல், கடுமையான, பாதிப்பை, பெரிய, மூட்டுக்களா, பந்துக்கிண்ண, மூட்டு, கை, மூட்டு, பிடிப்பு, ஏற்பட்டால், வெப்பத்தையும், சிவந்த, தோற்றத்தையும், எலும்புகளின், எக்ஸ்ரே, நரம்பிழை,  தசை, நார்களில், ஏற்படும், அழுத்தம், ருமெடாய்டு, ஆர்த்ரைடிஸ், ஆமவாதத்தின், முக்கிய, பாதிப்பு, அழற்சி, நாட்பட்ட, தீவிரம், அழற்சியில், வலி, சூடு, சிவந்து, ரத்தக், குழாய்கள், விரிவடைந்து, ரத்தம், நிவாரணமும், ஆமவாதத்தில், மூட்டுகளின், எலும்புகளின், சிதைவு, நோய், இரண்டாம், வருடத்திலேயே, ஆரம்பிக்கும், ஆமவாதத்தை, சிகிச்சை, மூட்டுகள், பாதிக்கப்படும், வீக்கம், கை, எலும்புகள், விரல்களின், மூட்டுகள், மணிக்கட்டு, மூட்டு, தோலடியில், வீக்கங்கள், கால்கள், விறைப்பாக, பாதிக்கப்பட்ட, வீக்கம், காணப்படும், இரத்தப், பரிசோதனையில், எக்ஸ்ரே, பழுதடைந்த, பரிசோதித்தல், ஆடோ, இம்யூன், உடலில், நோய், செல்கள், செல்களையே, மூட்டுகளில், அசுர, ஸினோவியல், செல்கள், மூட்டு, ஜவ்வு, எலும்புகளை, தேய்மானம், ஏற்பட்டு, வலி, அங்கவீனம், மூட்டுக்களில், இரண்டு, எலும்புகளுக்கு, தொடை, எலும்பும், முழங்கால், எலும்பும், முழங்கால், கார்டிலேஜ், ஜவ்வு, சினோவியம், மூட்டு, ஆட்டோ, இம்யூன், சினோவியம், வீக்கம், வலி, விறைப்பு, மூட்டு, மூட்டுவலி, மூட்டில், வீக்கம், மூட்டுக்களில், பாதிப்பு, மனிதருக்கு, மனிதர், மூட்டுக்கள், விரல்களின், கணுக்கள், மணிக்கட்டு, கால், விரல்களின், அடிபாதம், தோள்பட்டை, முழங்கால், முழங்கை, கணுக்கால், கழுத்து, வலி, வாய், கண், மூட்டுவலி, மூட்டுக்களில், வீக்கம், உடல், எடை, தொடை, கால்கள், மூட்டு, வியாதியின், ஆமவாத, முடிச்சுகள், பசியின்மை, சோர்வு, தசை, பலவீனம், நடப்பது, மலச்சிக்கல், தூக்கமின்மை, தலைச்சுற்றல், வாந்தி, ஜுரம், மூட்டு, வலிகளின், அஜீரணத்துடன், மூட்டு, வலியை, ஆமவாதம் ஆமா, ஜீரணிக்கப்படாத, உணவு, அஜீரணம், உடல், உழைப்பில்லாமல், ஆமவாதம், மூட்டை, மூலிகைகள், ஃப்ளாஸ்கில்,  இஞ்சி, துண்டுகள், ஜீரகம், பெருஞ்சீரகம், மிளகு, புதினா, இலைகள், உடல், ஆமாவை, மூலிகை, பொடி, ஜீரணிக்கப்படாத, கழிவுகள், மூட்டுகளில், வீக்கத்தையும், வலியையும், வாயு, பாதிப்புகள், அதீத, உடற்பயிற்சி, பட்டினி, இருப்பது, விபத்து, எலும்பு, முறிவு, குளிரின், பாதிப்பு, ஆயுர்வேத, ஆசான்களில், வாகபட்டர், எலும்புகளை, வாதம், வாய்வு, வாகபட்டர், எலும்புகளை, 5, பிரிவுகளாக, பிரித்து, மொத்த, எலும்புகளை, 163, மூட்டுகளில், கபத்தின், எண்ணைப், பசை, வாத, வறட்சி, மூட்டு, தேய்மானம், வாத, தோஷம் எலும்புகள், உடையும், வாயு, வாயுவை, ஆஸ்டியோ, ஆர்த்தரைடீஸ், மூட்டு, நோய்களை, வாயுவுடன், ஆமா, ஆம, வாதமாக, உருவெடுக்கிறது, கவுட்டும், ஆமவாதத்துடன், மூன்றும், முக்கியமாக, வாயு, தோஷத்தால், வலியை, மலச்சிக்கல், அஜீரணத்தை, போக்குதல், நடமாட்டம், முடங்கியிருந்தால், பத்தியம், மருந்துகள், அப்யங்கா, ஸ்வேதனா, உணவுக்கட்டுபாடு, யோகா, ஓய்வு, நவரக்கிழி, பிழிச்சல், தாரை, வாபனா, வஸ்தி, தசைகள், புங்க, இலைகளால், கஷாயத்தால், ஒத்தடம், கோதுமை, கற்பூராதி, தைலம், தந்தூராதி, தைலம், இரும்புச், சட்டியை, தவிட்டு, கிழியை, தேய்த்து, வலியுள்ள, ஒத்தடம், முருங்கைக், கீரை, எருக்கினிலை, புளியிலை, நொச்சியிலை, வாட்டி, தவிட்டுக்கு துணிக்கிழியில் கட்டி,


Spread the love