முக சுருக்கம் நீங்கி, தெளிவான பொலிவுடன் முகம் மாற…

Spread the love

செல்பீ மயமான உலகத்தில், ஒரு போட்டோவிற்கு கூட போஸ் கொடுக்க முடியாத நிலைமை வந்தால், அதுவும் இளம் வயதில், மிகவும் கடினமாகும். இதற்கு வைட்டமின் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கும், அதற்கு சத்தான பழங்களையும், காய்கறிகளையும் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது… அதோடு சில இயற்கை வீட்டு வைத்தியத்திலும் இந்த முக சுருக்கத்தை நீக்க முடியும்… அதை பற்றி பார்ப்போம்.

முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாற்றை  சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். இப்போது இந்த கலவையை சுருக்கம் உள்ள பகுதிகளில் நன்கு பூசி சிறிது நேரத்திற்கு உலர விட்டு முகத்தை கழுவி வரவும்.. முகம் கழுவ கடினமான சோப்புகளை பயன்படுத்த வேண்டாம்..  அதே போல் நன்கு பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து அதில் சில துளி தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்..  அதே மாதிரி முட்டை வெள்ளை கருவோடு தேனையும், வெள்ளரிக்காயையும் கொண்டு இந்த மாதிரி தடவி வந்தால் அழகான முகத்தை பெறுவதோடு முக சுருக்கத்தையும் நீக்கலாம்.


வாழைப்பழம் சரும கோளாறுகளுக்கு நல்ல நிவாரணியாக இருக்கின்றது.. வாழைப்பழ கலவையோடு தேன், அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தலாம். அடிக்கடி தக்காளி சாற்றை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் உலர விட்டு கழுவி வர முக சுருக்கம் மறைய தொடங்கும்… இதனால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, முக தோலிற்கு ஊட்டமளிக்கவும் செய்யும்.  
கடலை மாவுடன், சந்தனப்பொடி, ஆரஞ்சு சாறு, தக்காளி சாறு இவை யெல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திக்கான பேஸ்ட்டாக தயார் செய்து முகத்தில் தடவி வர, முக சுருக்கம் நீங்குவதோடு, சருமம் பொன்னிறமாக மாறும்…

 தூங்குவதற்கு முன்னால் அடிக்கடி ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தில் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்… இது சருமத்தில் இருக்கும் நுண்கிருமிகளை அழித்து, முகசுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெற உதவுகிறது..ஒவ்வொரு நாளும் இரவு படுக்கபோகும் அரை மணி நேரத்திற்கு முன் ஒரு தம்ளர் பசும் பால் தேன் கலந்து குடித்து வந்தால், எந்த சரும பிரச்சனையும் உங்களை நெருங்காது, அதோடு உடலிற்கு எந்த தீங்கும் ஏற்படாது…


Spread the love