சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டால், பொலிவிழந்து காணப்படும். சருமத்தில் சுருக்கங்களை போக்குவதற்கு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க எளிய முறையில் டிப்ஸ்களை இனி பார்க்கலாம்.
கற்றாழை ஜெல், உலர்ந்த ஆரஞ்சுப்பழத்தோல் , ரோஜாப் பூ பொடி, சந்தனப் பொடி போன்றவற்றை, தலா அரை தேக்கரண்டி எடுத்து, உலர்ந்த சருமமுடையவர்கள் பாலிலும், எண்ணைப்பசை சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டி கலந்த, தண்ணீரிலும் குழைத்து முகத்தில் பூசவும்.
ஒரு மேஜைக்கரண்டி அளவு சோளமாவுடன், அரை தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். அரை மணி கழித்து கழுவி விடவும்.
250 கிராம் கேரட் எடுத்து, பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி. கேரட்டை பொடியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு முகத்தில் கன்னங்களில் மற்றும் கண்களைச் சுற்றியும் தடவவும். 30 நிமிடம் விடவும். பிறகு கழுவவும்.
சருமத்தில் இருக்கின்ற சுருக்கங்களை,போக்குவதற்கு மேற்கண்ட வழிமுறைகளை, தவறாமல் பின்பற்றுங்க. உங்க சருமத்ததுல சுருக்கங்கள் இல்லாம, போய்டும்.