துயர் துடைக்கும் தூக்கம்

Spread the love

தூக்கம் மற்றும் தூக்கம் இன்மை என்பது மூளையின் செயல்பாடுகளை பொறுத்தது. ஆனால், தூக்கம் என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நன்கு உறங்குவதன் மூலம், உடலுக்கு ஓய்வு கிடைப்பதுடன், மூளைக்கு புத்துணர்வும் கிடைக்கிறது.

தூக்கம் குறைவதற்கான காரணங்கள்

வயதானவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயது ஆனாலே, தூக்கம் குறைவது இயல்பு தான்.

ஒருவர் தூங்கும் நேரத்தை விட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார். என்பது தான் முக்கியம்.

தூக்கத்தின் அவசியம்

உடல் நிலையின் காரணமாகவோ அல்லது முதுமையின் காரணமாக தூக்கத்தின் நேரம் குறைந்தாலும், தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை. பொதுவாக, ஒருவர் நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை உறங்குவது அவசியமானதாகும்.

தூக்கம் குறைவதின் காரணமாக உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது. சிறு வயதில் தேவையான அளவு உறங்காதவர்களுக்கு 35 வயதிலேயே மறதி வந்து விடுகிறது.

சரியாக தூங்காவிட்டால் சிறு வயதிலேயே கடுமையான கோபம் மற்றும் பார்பவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது போன்றவை சரியாக தூங்காததால் ஏற்படுகிறது.

சரியாக தூங்காவிட்டால்,

·           உடல் எடை குறையும்.

·           பணியில் ஆர்வம் குறையும்.

·           பகல் முழுவதும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள்.

·           அடுக்கு கொட்டாவி வரும்.

·           சோர்வு மற்றும் தலைவலி நம்மிடமே தங்கிவிடும்.

தூக்கம் குறைய காரணம் என்ன?

இன்றைய அவசர உலகத்தில் அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நிற்க்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில் தூக்கம் ஆறு மணி நேரத்திற்கு குறைவானதாகிவிட்டது.

பலர் பணியில் இருந்து வந்த பின்பும் கைபேசியில் பேசுவது மற்றும் கணினியில் தொடர்ந்து வேலை செய்வது போன்றவற்றில் நேரத்தை செலவழிப்பதால் தூக்க நேரம் சுருங்கி விடுகிறது.

இழப்பு, சோகம், கடன், வசதி குறைவு போன்றவற்றால் ஏற்படுகின்ற கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக தூக்கம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

தூக்கம் வர வழிகள்

·           பகலில் தூங்குவதை தவிர்க்கலாம்.

·           இரவில் அறையில் உள்ள மின் விளக்குகளை அனைத்து விடலாம்.

·           கணினியில் வேலை செய்வது மற்றும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.

·           தூக்க பிரச்சனை உள்ளவர்கள், மாலை நேரங்களில் உடற்பயிற்ச்சி செய்து வரலாம்.

·           தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடலாம்.

·           இரவு உறங்க செல்வதற்கு முன் தேநீர், காபி, குளிர் பானங்கள் ஆகியவற்றை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

·           தூங்க செல்வதற்கு முன் சிறுநீர் கழித்து விட்டு உறங்க செல்லலாம்.

·           தினமும் நடை பயிற்ச்சி, தியானம், யோகா செய்வது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது ஓவியம் வரைவது, தோட்டம் வளர்ப்பது போன்றவற்றில் ஈடுபடுவதின் மூலம் இரவில் நல்ல தூக்கம் வரும்.

·           தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் குளித்து விட்டு உறங்க சென்றால் ஆழ்ந்த உறக்கம் வரும்.

கீ. பி


Spread the love