தைராய்டு

Spread the love

தைராய்டு சுரப்பி நாளமில்லா சுரப்பிகளில் முக்கியமானதொன்று கழுத்தின் அடிபாகத்தில் இருக்கும் இந்த சுரப்பி இரண்டு பாகங்களாக, பிரிந்து மூச்சுக்குழாயின் இருபக்கமும், பட்டாம்பூச்சிபோல் காணப்படும்.

இந்த இரு பாகங்களும் Isthmus எனப்படும் குறுகிய அவயம் / திசுக்களால் ஆன பட்டையால் இணைக்கப்பட்டிருக்கும். மற்றொரு முக்கியமான நாளமில்லா சுரப்பியான “பிட்யூடரி” சுரப்பி (Pituitary gland) உற்பத்தி செய்யும் பல ‘ஹார்மோன்களில்’ ஒன்று தைராய்டை ஊக்குவிக்கும் ஹார்மோன். இதன் உதவியால் தைராயிடு சுரப்பி தைராயிட் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது சுரக்க ஐயோடின் (Iodine) என்ற மூலப்பொருளும் சிறிதளவு தேவை.

தைராய்டு ஹார்மோன், ஐயோடின் உள்ள ஒரு ஹார்மோன். இது மூளையின் செயல்பாட்டுக்கும், உடல், மன வளர்ச்சிகளுக்கு தேவை. இந்த ஹார்மோன் இரண்டு வகைப்படும் – Triiodothyronine மற்றும் Thyroxine.

இந்த ஹார்மோன் குறைந்தால், குழந்தைகளுக்கு உரிய வளர்ச்சி இல்லாமல் குள்ளமாகவே இருப்பது ஏற்படும். மன வளர்ச்சியும் இல்லாமல் போகும். பெரியவர்களுக்கும் மன, உடல் வளர்ச்சி இன்மை, ஊளைச்சதை, தோல் சொர சொரப்பாகுதல் போன்றவை உண்டாகும். இந்த ஹார்மோன் அதிகமானால் இதயத்துடிப்பு அதிகமாதல், அதிகமாக வியர்ப்பது, பதட்டம், நடுக்கம், அதிகமாக உண்பது, எடை குறைவது போன்றவை உண்டாகும்.

மற்ற சுரப்பிகள் போலில்லாமல் நாளமில்லா சுரப்பிகளுக்கு குழாயோ, தாரையோ நேரடியாக ரத்தத்தில் கலக்கப்படும். தைராய்டு, பிட்யூடரி தவிர அட்ரீனலின், பார தைராய்டு, கணையம், விரைகள், ஒவரிகள் (Ovaries), பினீயல் சுரப்பி இவைகளும் நாளமில்லா சுரப்பிகளே.

தைராயிடு சுரப்பி தான் நாளமில்லா சுரப்பிகளிலேயே பெரியது. 15 – 20 கிராம் எடையுள்ளது. நமது மூளையில் உள்ள ‘ஹைபோதாளமஸ்’ (Hypothalamus) என்ற பகுதி தான் நாளமில்லா சுரப்பிகளின் தலைவர். இவரது கட்டளை இல்லாமல் பீட்யூடரி சுரப்பி, தைராய்டை ஊக்குவிக்கும் ஹார்மோனான தைரோப்பினை (Thyroptin) சுரக்காது! பல காரணங்களால் இந்த மூன்று பாகங்கள், ஹைபோதாலமஸ், பிட்யூடரி, தைராயிடு பாதிக்கப்பட்டு ஹார்மோன் சுரப்பதில் கோளாறுகள் ஏற்பட்டால் ‘ஹைபர் தைராடிஸம்’ (Hyperthyrodism) ஏற்படும். இதன் அறிகுறிகள் – தலைவலி, பதட்டம், நரம்புத் தளர்ச்சி, நடுக்கம், சூட்டை தாங்கமுடியாமல் போவது போன்றவை. தவிர எல்லோரும் அறிந்த ‘கழுத்தில் வீக்கம்’ (Goitre) இது அயோடின் குறைவால் ஏற்பட்டால் Enclemic Goitre எனப்படும். Sporadic Goitre என்பது தைராயிடு சுரப்பியில் அளவில்லாத செல்கள் உருவாவதால் ஏற்படும் வீக்கம், கிரேவ் வியாதி (Graves disease) தாக்கும் போது, அதாவது அதிகமாக ஹார்மோன் சுரக்கும் போது ஏற்படும் வீக்கம் (Exophthalmic goitre) எனப்படும்.

இதில் கழுத்து வீக்கம் மட்டுமன்றி கண்கள் வெளியே பிதுங்கும். இது தைராய்டு புற்றுநோயாலும் ஏற்படும். அதிகம் ஹார்மோன் சுரப்பதால் (Hyper thyroidism) ஏற்படும் மேற்கூறப்பட்ட வியாதிகள் பொதுவாக Thyrotoxicosis என்று அழைக்கப்படும்.

இதன் காரணங்கள்

Graves disease – இந்த வியாதி தான் 70% Hyper thyroidism க்கு காரணம். ஆண்களை விட பெண்களை இவ்வியாதி 7 மடங்கு அதிகம் தாக்கும். இந்த வியாதி உடலின் தடுப்பு சக்திக்கு எதிரி. தைராயிடில் உண்டாகும் (Adenoma) எனும் அபரிமித திசுக்களின் வளர்ச்சி.

அதிக ஐயோடின் புற்றுநோய் (தைராயிடு புற்றுநோய்) தைராயிடில் பாக்டீரியா தாக்கினால்

சிகிச்சை முறைகள்

சரக ஸம்ஹிருதையின் படி Goitre எனும் கழுத்து வீக்கம் தேவையான பால் சாப்பிடுகிறவர்களுக்கு வராது.

தவிர பழைய அரிசி, பார்லி, உளுத்தம் பருப்பு, வெள்ளரி, கரும்புச்சாறு, பாலால் ஆன உணவுகள் இவைகளும் நோயாளிகளுக்கு கொடுக்கலாம். தவிர ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள் கிடைக்கின்றன. யோகாசனங்கள், சூர்ய நமஸ்காரம், பிராணாயாமம் போன்றவைகளும் உதவும். ஆனால் வீக்கம் பெரிதாக இருந்தால் உணவில் ஐயோடின் அதிகம் சேர்க்க வேண்டியது முதல் சிகிச்சை – அத்துடன் மருத்துவரை நாடி முறையான சிகிச்சை தொடங்கவும்.

To Buy herbal Products…


Spread the love