நரம்பு பலவீனம் என்பது பொதுவாக போதை பழக்கத்தாலும், தவறான பழக்க வழக்கங்களாலும் ஏற்படுகிறது. இது நாளடைவில் நரம்பு தளர்ச்சியாக மாறி வாழ்க்கையையே நாசமாக்கி விடுகிறது. சில பேருக்கு சாதாரணமாகவே நரம்புகள் பலவீனமாக இருக்கும். அவர்களால் எந்த வேலையும் செய்யமுடியாமல், சோர்வு அடைந்து, எப்போடா படுக்கலாம்னு தோணும்.
இவர்கள் முதலில் தவிர்க்க வேண்டியது அதிகப்படியான காபி, டீ, காரம், புளி, கடுகு மதுப்பழக்கம், சிகரெட், புகையிலை பொருட்கள் ஆகியவை.
மதுப்பழக்கம், நரம்பு மண்டலத்த பாதிப்படைய செய்கிறது மட்டுமில்லாமல் மன நோய் ஏற்படவும் காரணமாக இருக்கும். இதனால் உடல் நடுக்கம், மறதி, பயம், பதட்டம் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றது.
நரம்பு பலவீனத்திற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுக்கலாம்? வைட்டமின் டி நிறைந்த கம்பு,சோளம், புழுங்கல் அரிசி, கேழ்வரகு , கோதுமை, கடலை, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாதாம், நிலக்கடலை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலை கீரை, முட்டைகோஸ், பீட்ரூட், கேரட், வெங்காயம், காலி பிளவர், பட்டாணி, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சிப்பழம், மாதுளம்பழம், தக்காளி இதெல்லாத்தையும் முறையாக சாப்பிட்டு வரவும்.
இதோடு காய்ச்சிய பசும்பாலும் கொஞ்சம் குங்குமப்பூவை போட்டு தினமும் இரவு குடித்து வருவது நல்லது. அதை தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா செய்து வருவதனால் நல்ல பயன் கிடைக்கும்.
மேலும் தெரிந்து கொள்ள…