சுவைக்கும், சத்திற்கும் குறைவில்லாத வாழைக்காயில் கலோரிகள், கார்போஹைட்ரேட், நார்சத்து, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, இ, கே, பி-6, சோடியம் இவையனைத்தும் நிறைந்துள்ளது. மேலும் இதில் மாவுசத்து இருப்பதினால் வாழைக்காய் சிறிது எடுத்தாலே நமது உடலிற்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். இந்த மாவுச்சத்து கர்ப்பினி பெண்களுக்கு முதல் நாளிலிருந்து பிரசவம் ஆகும் கடைசி நாள் வரை மிகவும் அவசியம்.
ஒரு பெண் பிரசவ வலியை தாங்குவதிலிருந்து குழந்தையை வலமாக சரியான எடையுடன் பெற்று எடுப்பதற்கு அத்தியாவசமாக இருக்கின்றது. இதில் இருக்கும் இரும்புசத்து மனித உடலின் இரத்தத்தில் ஈமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகைவராமலும் தடுக்கின்றது. வாழைக்காயில் இருக்கும் நார்சத்து ஜீரண மண்டலத்தை சீராக்கிநச்சு கிருமிகளை அழித்து வெளியேற்றி செரிமானத்தை சீராக செயல்பட வைத்து மலச்சிக்கலைபோக்குகின்றது.
குடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கவும் முக்கியபங்காக இருக்கின்றது. அதனால் ஓபிசிட்டி இருக்கிறவர்கள் உணவில் வாழைக்காய் தாராளமாகஎடுக்கலாம். மற்றொரு நன்மை என்னவென்றால், இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதினால் விரைவில்பசியை அடக்கும் தன்மையை கொண்டிருக்கும். அதனால் தேவையில்லாத கேடுவிளைவிக்கும் உணவுகளைதவிர்க்கலாம். மேலும் பெருங்குடலில் ஏற்படும் புற்று நோயை தடுக்கும்.
வாழைக்காயை சமைக்கும் போது மேல் தோலை பட்டும் படாதவாறு சீவி சமைத்துசாப்பிட்டால் இரத்தம் விருத்தி அடையும். மேலும் மலம் கழித்தல், இருமல் போன்ற பிரட்சனைகளும் தீரும்.இருந்தாலும் அதிக வாயு தொல்லை மற்றும் கட்டுபாட்டை மீறின சர்க்கரை நோயாளிகள்வாழைக்காயை அளவோடு சாப்பிடலாம். நோய் வாய்ப்பட்டு உடல் சோர்வாக இருப்பவர்கள்வாழைக்காயை அடிக்கடி சாப்பிடலாம். இதனால் உடல் வலு பெறும். குறிப்பாக வாழைக்காயின்மூல பயன்கள் என்னவென்றால்? ஜூரண உறுப்புகளுக்கும், உணவு குழாய்களுக்கும் ஊட்டத்தைஅளிக்ககூடியதாகும்.
https://www.youtube.com/embed/uj6CeVjMJUo