மழை காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்…!

Spread the love

மற்ற காலங்களை விட மழைக்காலங்களில், நாம் உணவுகள் மேலே அதிகமாக கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால்? மருத்துவ செலவுகள் அதிகமாவதே இந்த காலத்தில்தான். இதில் GST வேறு தலைவிரித்து ஆடுகின்றது. அதனால் வழக்கமாக மற்ற நேரங்களில்நாம் எடுக்கும் உணவுகளில் மழை காலத்தில் சிறிது கவனம் செலுத்துவது அவசியம். அந்தவகையில் நம்மை நோயில் இருந்து காக்ககூடிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.


வாரத்தில் இரண்டு நாளைக்கு பூண்டு ரசம் செய்து சாப்பிட்டு வரவும்ஏனென்றால்? இதில் ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. இது நம்முடைய நோய் எதிர்ப்புசக்தியை இன்னும் தூண்டகூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி செரிமானமண்டலத்தையும் சீராக்குகின்றது. மழைகாலங்களில் நம்மை ஆரோக்கியமாக வைக்க முடியும்.அதுமட்டுமின்றி, மழைகாலங்களில் நச்சுகிருமிகள் உயிர்பெற்று நமக்கு காய்ச்சல், சளிபோன்ற பிரட்சனைகள் வருவதற்கு காரணாமாக இருக்கின்றது. அதனால் நச்சுகளுடன் போராடும் நோய்எதிர்ப்புசக்தி நமக்கு பூண்டில் இருந்து தாராளமாக கிடைக்கின்றது.


மழைகாலங்களில் தினமும் ஒரு வேலையாவது இஞ்சி டீ குடித்து வாருங்கள்.இதில் சுவையும், வளர்ச்சிதையை ஊக்குவிக்ககூடிய திறனும் உள்ளது. அதோடு நமது மூளைக்குபுத்துணர்ச்சியையும் தருகின்றது. மற்றொரு விஷயம் என்னவென்றால்? மழைகாலங்களில் இஞ்சிதுண்டுகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைசாற்றையும், தேனையும் சேர்த்து குடித்து வந்தால் மோசமான காய்ச்சல் வர வாய்ப்பேஇல்லை. காரணம் இந்த நிரப்பியில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.


அடுத்து மிளகு, தொற்றுகள் மற்றும் காய்ச்சலை விரட்டி அடிக்க கூடிய ஆற்றல்இயற்கையாகவே மிளகில் உள்ளது. மிளகை பொதுவாக ஆம்லெட் அல்லது சூப் போன்ற வடிவத்தில்அதிகமாக சேர்த்து கொள்ளவும். மிளகில் இருக்கும் குணம் காய்ச்சல், சளி, தலைவலி,தசைவலி மற்றும் விஷகாய்ச்சல் வரைக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கின்றது .அதோடுஇந்த பிரட்சனைகள் தொடங்கும்போதே அதை அழிக்க கூடியதாக இருக்கின்றது.

இந்த எளியஉணவுகளின் தன்மை பாதாம், ஆப்பிள், மாதுளை, ஆகியவற்றில் அடங்கியுள்ளது. இந்தஉணவுகளை உண்பதினால் மழைகாலங்களில் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் நோய் தொற்றுகளில்இருந்து பாதுகாக்கலாம். முக்கியமாக இரவு நேரங்களில் மிதமான சுடு தண்ணீர் குடித்துவருவது நல்லது.          

ஆயுர்வேதம்.காம்


Spread the love