முள்ளங்கிச் சாறு

Spread the love

முள்ளங்கி சாற்றோடு சர்க்கரைச் சேர்த்து உள்ளுக்கு கொடுத்து வர குத்திருமல், பல வித ஈரல் நோய்கள் குணமடையும். 50 கிராம் முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்துச் சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் இறங்கும். முள்ளங்கி சாறை காலை, மாலை அருந்துவதால் மூல நோய்கள் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்துச் சாப்பிட இருமல், நெஞ்சக சார்ந்த கோளாறுகள், இதய வலி, வயிறு உப்புசம், தொண்டைப் புண், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும். கோடை காலத்தில் முள்ளங்கிச் சாறை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும். ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். முள்ளங்கி விதைகள் வயிறு நிரம்ப இருப்பது போன்ற நிலையிலும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு, புளிப்புடன் நாம் உண்ணும் உணவு நீண்ட நேரத்திற்குப் பிறகு செரிமானம் ஆகாமல் வயிற்றுப் போக்கை உண்டாக்குகிற போதும், நெஞ்சுக் கோழை அதிகரித்து இருமல், மூச்சிரைப்பு ஏற்படுகிற போதும் சிறந்த பலன் தருகிறது. முள்ளங்கி விதையை நன்றாக இடித்து காடி சேர்த்து குழைத்துப் பசையாக்கி, வெண் புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும். தினம் இவ்வாறு செய்து வருவது நல்லது.

இதையே படர் தாமரை, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர குணம் பெறலாம்.

இளம் முள்ளங்கித் துண்டுகளுடன் காரட், பீட்ரூட் போன்றவற்றையும் துண்டுகளாக்கி ஒன்று சேர்த்து சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்பு சிறிது சேர்த்து சாலட் போல உணவுடன் சேர்த்துச் சாப்பிட உடலுக்கு நல்லது.

மேற்கூறிய வேதிப் பொருட்கள் பித்த நீரை ஒழுங்காகச் சுரக்கச் செய்கின்றன. இதனால் முள்ளங்கியினை உணவில் சேர்த்துக் கொள்வதனால் ஆரோக்கியமான பித்தப்பைக்கும், ஈரலுக்கும் உதவுகிறது. அத்துடன் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மேலை நாடுகளில் முள்ளங்கிச் சாறு, இருமலைத் தணிப்பதாகவும், மூட்டு வலிகளைக் குணப்படுத்துவதாகவும் பித்தப் பை சம்பந்தமான நோய்களுக்கு குணம் தரக் கூடியதாகவும் உள்ளது என்று கூறுகின்றனர். அதனால் முள்ளங்கிச் சாறு அவர்கள் அருந்துகின்றனர். முள்ளங்கிச்சாறு நீண்ட நாட்களாக நெஞ்சு, வாயு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. மேலும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.


Spread the love