பொடுகை போக்கி தலைமுடி செழித்து வளர இதை யூஸ் பண்ணி பாருங்க…

Spread the love

ஆட்டிப்படைக்கின்ற பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வைப்பதோடு, தலை முடியையும் வளர தூண்டும் ஒரு இயற்கை காய் வகை, நம் அன்றாட உணவு பட்டியலில் இருக்கின்றது. இதில் இருக்கும் நார்சத்து உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகளை வெளியேற்றி, உடலை தூய்மைப்படுத்த உதவுகின்றது… இந்த பயனுள்ள காய்தான் முள்ளங்கி..  அதிகமானோர் முள்ளங்கியை உணவில் சேர்க்க விரும்பமாட்டார்கள்… இதில் இதை பச்சையாக எப்படி பயன்படுத்துவது என சிந்திப்பார்கள். ஆனால் முள்ளங்கியில் தேவையான சுவையும்,ஊட்டச்சத்தும் இருக்கின்றது.


முள்ளங்கி சாற்றை, தலைக்கு தேய்த்து அப்படியே அரை மணி நேரம் காய விட்டு அலசி வந்தால், பொடுகு பிரச்சனை தீரும்… காய்களில் அதிகப்படியான நீர்சத்து நிறைந்திருக்கும்… முள்ளங்கியிலும் அது தாராளமாக கிடைக்கும்… முள்ளங்கையில் இருக்கும் நீர்சத்து தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும். உடல் சூட்டை குறைத்து முடி உதிர்வையும் தடுத்து நிறுத்தும்… இரும்பு சத்து குறைபாட்டால் உடலுக்கும், தலைமுடிக்கும் சரியான வலிமை இருக்காது…

முள்ளங்கையில் இருக்கும் இரும்பு சத்து உடலிற்கு வலிமை தருவதோடு,தலைமுடியையும் வலிமையாக்கும்… அடர்த்தி குறைவாக இருக்கும் தலைமுடியை அடர்த்தியாக்கவும் உதவுகிறது..
கருப்பு முள்ளங்கி அதிகமானோர்க்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை… இந்த கருப்பு முள்ளங்கியின் ஜூஸ் , தலைக்கு தேய்த்து வருவது, முடி உதிர்விற்கு நல்ல பலனை தரும்… இது முடி வளர்ச்சியை தூண்டவும் செய்கிறது..

புதிதான முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், கூந்தல் ஷைனிங் ஆகும்… முள்ளங்கி தோலின் ஆரோக்கியத்திற்க்கு அதிகளவில் பயனளிக்கக்கூடியதாக இருக்கின்றது. முள்ளங்கி சாறில் ஆலிவ் ஆயிலை சேர்த்து முகத்தில் தடவி வர, வறண்ட சருமத்தில் ஏற்படும் தோல் வெடிப்பு மறையும்…   முள்ளங்கியை பேஸ்ட்டாக்கி அத க்ளென்சராவும், பயனுள்ள பேஸ்பேக்காகவும் பயன்படுத்தலாம். இது  தோள்களின் துகள் வரை ஊடுருவி நச்சுக்கிருமிகளை அழிப்பதோடு,முகப்பரு, கரும்புள்ளி இவையெல்லாவற்றையும் நீக்கும். அதிகமான நன்மைகளை தரக்கூடிய முள்ளங்கியை, உணவில் சேர்ப்பதோடு உடல் உறுப்புகளுக்கும், மிகவும் நல்லது… அதனால் தொடர்ந்து முள்ளங்கியை உணவு பட்டியலில் சேர்த்து வருவது நல்லது…

உணவில் சேர்ப்பதோடு உடல் உறுப்புகளுக்கும், மிகவும் நல்லது… அதனால் தொடர்ந்து முள்ளங்கியை உணவு பட்டியலில் சேர்த்து வருவது நல்லது…

ஆயுர்வேதம்.காம்



Spread the love