முள்ளங்கியில் நீர்சத்து நிறைந்துள்ளது. உங்கள் சருமத்தை நீரேற்றத்தில்இருந்து காப்பாற்றி, தொற்றிற்கு எதிராக போராடும் முள்ளங்கியில் விட்டமின் சி நிறைந்துள்ளது.இது ஆண்டி-ஆக்சிடண்டாக செயல்பட்டு தோல் வியாதி மற்றும் வீக்கத்தில் இருந்துகாக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் சிங்க் சருமத்தை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகின்றது.
அனைவரும் எதிர்பார்ப்பது தெளிவான தோல் மட்டும் தான் அதனால் முள்ளங்கியில் இருக்கும் நார் தோலிற்குள் ஊடுருவியிருக்கும் நச்சு கிருமிகளைஅழித்து, இறந்த செல்களையும் இனபெருக்கம் செய்கின்றது. இதனால் எளிய வழியில் நமக்கு தெளிவான தோல் கிடைக்கும். முள்ளங்கி நல்ல இயற்கை சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றது. அரைத்தமுள்ளங்கியை முகத்தில் தடவி கழுவி வந்தால் முகம் பிரகாசிக்க தொடங்கும்.
இதை சிறந்தFace Mask-ஆகவும் பயன்படுத்தலாம்.
பொதுவான முகப்பிரட்சனையான முகப்பருவையும் போக்கும் ஆற்றல் உள்ளது.இந்த பேக் மூலமாக பருவையும் விரட்டலாம். சருமத்திற்கு மட்டுமல்ல தலைமுடிக்கும்முள்ளங்கி நல்ல பயனளிக்கும் பொருளாக இருக்கின்றது. முள்ளங்கி சாற்றை எடுத்து Hair Mask-காகபோட்டு வந்தால் முடியுதிர்வு நின்றுவிடும். இது வேர்கால்களுக்கு ஊட்டத்தை அழித்துதலைமுடியை வலிமையாக்கும். மேலும் முள்ளங்கியை உணவு மூலமாகவோ அல்லது Hair Mask மூலமாகவோபயன்படுத்தி வர, பொடுகு நீங்கும் என கூறப்படுகின்றது.
வெறும் முள்ளங்கி சாற்றை எடுத்து, தலை முழுவதும் தடவி, ஒரு மணி நேரம்கழித்து அலசி வர பொடுகு பிரட்சனை நீங்கும். முள்ளங்கியை விழுதாக அரைத்து தலைக்குதேய்த்து குளித்து வர, முடிக்கு பளபளப்பு கிடைக்கும். நமது உடலில் ஈரப்பதம்குறையும் போதுதான் நமது தலைமுடியும் வலுவிழக்கும். அதனால் அடிக்கடி உணவில் முள்ளங்கியைசேர்த்து வந்தால் ஹைட்ரேட்டிங் பிரட்சனையே வராது.
https://www.youtube.com/embed/UGFFOzfC6vY