டாக்டர், ஆண்மைக்குறைவு என்றால் என்ன? அதில் வகைகள் உள்ளனவா?
வயதுக்கு வந்த ஆண், ஒரு பெண்ணைப்பற்றி நினைவு கொள்ளும் போதோ அல்லது அவர்களுடன் பழகும் போதோ அவனின் ஆண் உறுப்பு விறைப்பாக எழுச்சியடையும். நல்ல நிலையில் உள்ள ஆணுக்கு அவன் சாதாரணமாக எந்த வித பயமும் இன்றி நல்ல பெண்ணுடன் நல்ல நிலையில் உடலுறவு கொள்ளும் போது அவனின் எழுச்சியடைந்த ஆண் உறுப்பை பெண் உறுப்பினுள் முழுவதுமாக செலுத்தி அவரவர் மனோநிலை, உடல் நிலைக்கேற்றவாறு பல நிமிடங்கள் உடலுறவு கொண்டு அவள் உச்சநிலையடைந்தும், அவனின் விந்து வெளிப்படுவது சரியான ஆண்மைக்கு அடையாளம். இதில் எங்காவது ஓரிடத்தில் குறை ஏற்படின் அது ஆண்மைக் குறைவு. இதில் சில வகை அடியிற் குறிப்பிடப்பட்டுள்ளன.
a) பெண்களைக் கண்டதும் அல்லது நெருங்கிப் பழகியதும் விறைப்பு ஏற்பட்டு, பின் உடலுறவு கொள்ள நெருங்கும் போது தொய்வு ஏற்படும். இது முதல் வகை.
b) சிலருக்கு ஆணுறுப்பு விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் செலுத்துவதற்குள் விந்து வெளிப்படும். இது இரண்டாவது வகை.
c) ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் கூட செலுத்திவிடுவர், சில வினாடிகளில் விந்து வெளிப்பட்டு விடும். உடனே உறுப்பு தொய்வும் கண்டுவிடும். இது மூன்றாம் வகை.
d) எவ்வளவு தான் பெண்ணுடன் உடலுறவு கொள்ள நினைத்தாலும் கட்டிப்புரண்டாலும் ஆணுறுப்பு எழுச்சியே அடையாது. இது நான்காம் வகை.
e) ஆணுறுப்பு எழுச்சியடையும், ஆனால் விறைப்புத் தன்மை போதுமான திருப்பதியளிக்கக் கூடியதாக இருக்காது. இது ஐந்தாம் வகை.
f) ஆணுறுப்பு எழுச்சியடைவது, விறைப்புத் தன்மை அடைவது, உள்ளே செலுத்துவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் விந்து வெளிப்படாது. இது ஆறாம் வகை.
டாக்டர், ஆண்மையின்மைக்கும், மலட்டுத்தன்மைக்கும் என்ன வித்தியாசம்?
மலட்டுத்தன்மையுடைய ஆணுக்கு ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, பெண்ணுறுப்பில் செலுத்துதல் போன்றவற்றில் குறை இருக்காது. மகிழ்ச்சிகரமான உடலுறவை அவன் மேற்கொள்ள முடியும். ஆனால் அவனுடைய விந்துவில் முழுமையான உயிரணுக்கள் இருக்காது. ஆண்மைக் குறைவு பற்றி முந்திய கேள்வியிலேயே விளக்கி இருக்கிறேன்.
டாக்டர், குழந்தை பெறும் சக்திக்கு வயது வரம்பு உள்ளதா?
பெண்ணுக்கு உண்டு, ஆணுக்கு இல்லை. ஆணுக்கு அவனது ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, விந்துவில் முழுமையான உயிரணு உள்ளவரை எந்த வயதிலும் (அவன் பருவமடைந்த பின்) குழந்தை பெறும் வாய்ப்புள்ளது. அதே போல் பெண்ணுக்கு பருவமடைந்த காலந்தொட்டு மாதவிலக்கு ஒழுங்காகவும், கர்பப்பைக் குழாய்கள், சூல்ப்பை போன்றவை நல்ல முறையிலும் இயங்கும் பெண் நிரந்தரமாக மாதவிலக்கு நிற்கும் காலம் ( மெனோபாஸ்) வரை குழந்தை பெற வாய்ப்புள்ளது.
டாக்டர் சிலருக்கு “டெஸ்டிஸில்” உயிரணுக்கள் உற்பத்தியாகாமல் போவதேன்?
a) விதைக் கொட்டைகள் கீழே இறங்காமல் வயிற்றிலேயே இருந்து விடலாம்.
b) விபத்தினால் விதைக் கொட்டைகள் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
c) ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கப்படாமல் இருக்கலாம்.
ஆணின், செயல்பாடு,
ஆண்மைக், குறைவு, ஆண், உறுப்பு, உடலுறவு, உறுப்பினுள், மனோ,நிலை, உடல், உடலுறவு, விறைப்பு, உடலுறவு, ஆணுறுப்பு, விறைப்பு, பெண்ணுறுப்பில், விந்து, விறைப்பு, விந்து, உறுப்பு, பெண்ணுடன், உடலுறவு, ஆணுறுப்பு, விறைப்பு, ஆணுறுப்பு, விறைப்புத், மலட்டு, தன்மையுடைய, ஆணுக்கு, ஆணுறுப்பு, விறைப்புத், தன்மை, பெண்ணுறுப்பில், உடலுறவை, விந்துவில், உயிரணுக்கள், ஆண்மைக், குறைவு, விந்துவில், உயிரணு, மாதவிலக்கு, கர்பப்பைக், குழாய்கள், விதைக், கொட்டைகள், ஹார்மோன்க