கேள்வி பதில்

Spread the love

கேள்வி:

ஆயுர்வேதம் டுடே ஆசிரியர், டாக்டர் அவர்களுக்கு வணக்கத்துடன் உங்கள் வாசகன் எழுதிக் கொள்வது. நீண்ட நாட்களாக உங்கள் பத்திரிக்கையை படித்து வருகிறேன். பெரும்பாலான மனிதர்களின் முதல் பிரச்சனையே செரிமானமின்மை தான். அது போக இரத்த அழுத்தம், மூட்டுவலி, சர்க்கரை வியாதி, து£க்கமின்மை என்று அவதிப்படுகின்றனர். மேற்கூறிய நோய்களுக்குத் தனித்தனியாக மருந்து சாப்பிட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் விட ஒரே மருந்தாக தயாரித்து உட்கொள்வது போன்ற வழி இருக்கிறதா? இருப்பின் தகவல் தர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

எந்த வகையான உணவு நாம் சாப்பிடுவதாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுதல் நல்லது. ஒரு சில மனிதர்கள் குறைவாக சாப்பிடுவார்கள். ஒரு சிலர் அதிகமாகவும், ஒரு சிலர் மீடியமாகவும் சாப்பிடுவார்கள். அவரவர் உடல் வாகுக்கு ஏற்றார்போல சாப்பிடுகிறார்கள் என்று கூறினாலும், பொதுவாக அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் செரிமானம் கெடுகிறது. இதனால் அவர்களுக்கு மாலை நேரங்களில் வயிறு சார்ந்த பல சிக்கல்களை தோற்றுவிக்கிறது. இதனால் அவர்களுக்கு து£க்கம் கெடுதல், நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலச் சுரப்பினால் அவஸ்தை போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேற்கூறிய அறிகுறிகள், பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற இயற்கையான மருந்தாக மஞ்சள், இஞ்சி, தேங்காய்ப் பால் இவைகளைப் பயன்படுத்தலாம். மேற்கூறிய பொருட்களில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் காரணமாக செரிமானக் கோளாறுகள் நீங்குகின்றன. வளர்சிதை மாற்ற செயல்களை ஊக்குவிக்குறது. மேலும் போதிய அளவு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

கேள்வி

நான் ஒரு முதுநிலை பட்டதாரி. நான் தற்போது தான் திருமணம் செய்துள்ளேன். என் கணவர் வீட்டில் சிலரைப் பார்க்கும் போதே கோபம் பொறுக்க முடியாமல் வருகிறது. இதனால், அதிகமாக மன உளைச்சல் அடைகிறேன். கோபத்தால் கணவருடன் தாம்பத்தியம் கூட சரியில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது. இதற்கு தீர்வு சொன்னால் கடைபிடித்து நலமடைவேன். நன்றி.

பதில்

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வேலைப் பளு, நேர மேலாண்மை செய்யத் தெரியாமை போன்ற காரணங்களால் இன்று வாழும் நவநாகரீக மனிதர்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபம் தலை தூக்குகிறது. தாங்கள் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி. தங்களுக்கே கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுவது நல்லதல்ல தோழி.

கோபம் மனிதர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு. இதை தினமும் மற்றவர்கள் மேல் பிரயோகித்து தங்கள் பலவீனத்தை காட்டிக் கொள்பவர்கள் பலவீனத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் ஆவர். சினிமாக்களில் ஹீரோக்கள் கூட கோபம் கொள்கின்றனர். இதைப் பார்க்கும், அறியாமை கலந்த மக்கள் எல்லோரும் கோபம் கொள்வது மட்டும் தான் வீரம் என்று கொள்கின்றனர்.

இதை மன நலம் சார்ந்த பிரச்சனையாக உலகம் முழுதும் பார்க்கப்படுகிறது.

கோபம் என்பதும் காமம் மாதிரி தான். ஒருவர் தன்னிடம் உள்ள காமத்தை அறிந்து அதைக் கடக்க முயல வேண்டும். அதே மாதிரி, கோபத்தை ஒவ்வொருவரும் கண்டிப்பாக விலக்க, அதனை அறிந்து கடக்க வேண்டும். கோபத்தை அடக்க முயல்வது கூட ஆயுர்வேத மருத்துவத்தின் படி பல பின் விளைவுகளைக் கொண்டு வரும்.
Spread the love