மாதமொரு வைட்டமின் H6 (Pyridoxine)

Spread the love

தண்ணீரில் கரையும் வைட்டமின்களை H6, மூன்று வேதிப் பொருட்கள் கொண்டது. அவை பைரிடாக்சின் (Pyridoxine), பைரிடாக்சினால் (Pyridoxinal), மற்றும் பைரிடாக்சமைன் (Pyridoxamine). வைட்டமின் H6, H2 முக்கியமான வைட்டமின்.

H 6 ன் பணிகளும், பயன்களும்

கொழுப்பு, புரதங்களை உடல் உட்கிரகிக்க உதவுகிறது. புரத (அமினோ அமில) வளர்சிதை மாற்றம் Transmination எனப்படும். இதற்கு உதவும் கோ – என்சைம் (Co – Enzyme), பைரிடாக்சல் பாஸ்பேட் (Pyridoxal Phospate) இந்தப்பொருள் வைட்டமின் H 6 லிருந்து பெறப்படுகிறது.

ரத்தத் தயாரிப்பில் உதவுகிறது. ரத்த சிவப்பணுக்களை உண்டாக்குவதிலும் உதவுகிறது. இதனால் உடலின் நோய் தடுப்பு சக்தி பெருகுகிறது.

மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளுக்கு (குறிப்பாக மூளை தசைகள்) தேவையான வைட்டமின்.

தாதுப்பொருட்களை உடல் ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

உதடுகளின் ஒரத்தில் ஏற்படும் வெடிப்புகள் (Stomatitis), சில வகை சோகை வியாதிகள் குணமாக உதவுகிறது.

பெண்களின் மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் சங்கடங்களை (Pre – Menstrual Syndrome) குணப்படுத்த உதவுகிறது.தலை முடி வளர உதவும்.

கிடைக்கும் உணவுகள் / அளவுகள்

முழுகோதுமை, தவிடு, ஈஸ்ட், வேர்க்கடலை, உலர்ந்த திராட்சை, முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், காய்கறிகளில், முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், பட்டாணி, பழங்களில், வாழைப்பழம். அசைவ உணவில், கோழி, இறைச்சி, முட்டை, மீன், மாட்டிறைச்சி. விலங்குகளில், கல்லீரல், சிறுநீரக அவயங்கள்,

தினசரி தேவை

இந்தியர்களின் தினசரி H 6 வைட்டமின் தேவை இன்னும் வரையறுக்கப்படவில்லை. இந்திய உணவுகளில் உள்ள H 6 அளவுகளும் சரிவர கணிக்கப்படவில்லை. தினமும் 0.6 மி.கிராமிலிருந்து 2.5 I.A, H6 போதுமானது என்று கருதப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 1.3 மி.கிராமும், பெண்களுக்கு இதே அளவும், 50 – க்கு மேற்பட்ட ஆண்களுக்கு 1.7 மி.கிராமும் பெண்களுக்கு 1.5 மி.கிராமும் பரிந்துரைக்கப்படுகிறது. கர்பிணிகளுக்கு 1.9 மி. கிராமும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 2 மி.கிராமும் தினசரி பரிந்துரைக்கப்படுகிறது.

குறைபாடுகளால் வரும் பிரச்சனைகள்

நரம்புத் தளர்ச்சி, சோகை, வாய்ப்புண்கள், சரும நோய்கள், தலைமுடி உதிர்தல், தசை பலஹீனம் முதலியன விட்டமின் H 6 குறைபாடால் ஏற்படும்.

அதிகம் உட்கொண்டால் ஏற்படும் பிரச்சனைகள்

நரம்பு மண்டல தீவிர பாதிப்பு ஏற்படும். இதனால் நடமாட முடியாமல் போய்விடலாம். எனவே மருத்துவ ஆலோசனை இன்றி விட்டமின் H6 எடுத்துக் கொள்வது தவறு. குறிப்பாக பார்க்கின்சன்ஸ் வியாதி உள்ளவர்கள் விட்டமின் H6 ஐ டாக்டரின் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளவே கூடாது.

எதனால் அழிகிறது? மற்ற H பிரிவு வைட்டமின்களை போல உணவுப்பொருட்களை சூடுபடுத்துவதால் H6 அழிந்து விடுகிறது. சூரிய ஒளி கூட இந்த விட்டமின்களை அழித்து விடும். சாராயமும், தூக்க மாத்திரைகள், உணவில் உள்ள அமிலங்கள், காரங்களும் கூட விட்டமின் H6 ஐ அழித்து விடும்.


Spread the love
error: Content is protected !!