அரிசி புட்டு
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/2 கிலோ
தேங்காய் – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை 1 மணிநேரம் ஊற வைத்து பின் நிழலில் கொட்டி காயவைத்து நன்கு காய்ந்தவுடன் சற்றே கரகரப்பாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு மாவுடன் தேவையான அளவு நீர் தெளித்து நன்கு பிசையவும். (அதிக நீர் ஊற்றினால் கெட்டியாகிவிடும்). பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் துணி போட்டு வைத்து வேக விட வேண்டும். வெந்த பின் இறக்கி வைத்து ஆற விட்டு தேவையான அளவு சர்க்கரையும், தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு கலந்து சாப்பிடலாம்.
வெண்ணை புட்டு
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
கடலைபருப்பு – 3 ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
முந்திரி பருப்பு – 10 (நெய்யில் வறுத்து துண்டுகளாக உடைத்து)
தேங்காய் – 1/2 கப்
செய்முறை
அரிசி மாவுடன் 10 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அப்போது அதனுடன் கடலைப்பருப்பு, சர்க்கரையும் சேர்த்து கலந்து அடிபிடிக்காமல் நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு வெந்தவுடன் இறக்குவதற்கு முன் தேங்காய், முந்திரி பருப்பை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைத்து நன்கு ஆறவிட வேண்டும். ஆறிய பின் சாப்பிடலாம்.