பூசணியின் மகத்துவம்

Spread the love

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பூசணிக்காயானது சிறந்த மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது. இந்த பூசணிக்காயை கண் திருஷ்டி காயாக ரோட்டில் போட்டு உடைப்பதும் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

பூசணிக்காயின் மருத்துவப் பயன்கள்:

100 கிராம் பூசணிக்காயில் கிடைக்கும் கலோரி 15 தான், இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த, ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்பதால் எந்த வித தீங்கும் ஏற்படாது. அதே வேளையில், உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.ஒரு சிலருக்கு சிறுநீர் சமபந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.இவ்வாறான பிரச்சனையுடன் இருப்பவர்களுக்கு பூசணிக்காய்,சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது.மேலும்.பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது.

திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்குவதில் பூசணிக்காய் மகத்துவம் நிறைந்தது. இதன் விதைகளை காயவைத்து, பொடியாக செய்து வைத்துக் கொண்டு, தினசரி இந்த பூசணிக்காய் விதைப்பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டு நல்ல உடல் வலிமை மற்றும் தேக ஆரோக்கியம் பெருகும்.

பூசணிக்காய் சாம்பார்

முதலில் தேவையான அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் குக்கரில் 1 கப் அளவிலான துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.அடுத்து வெங்காயம், தக்காளி, பூசணிக்காய் போட்டு லேசாக வதக்க வேண்டும்.

பின்னர் வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும், தேவையான அளவு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் சிறிதளவு புளி ஊற்றி நன்கு கொதித்ததும், கொத்தமல்லியைத் தூவினால் பூசணிக்காய் சாம்பார் ரெடி.

பூசணிக்காய் அல்வா

பூசணிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொண்டு, குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு விசில் வந்தவுடன் பூசணிக்காய் அந்த தண்ணீரிலேயே நன்கு மசித்துக் கொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும், வேக வைத்த துண்டுகள் கரைந்து விழுதாகி விரும்.இதில் நீங்கள் விரும்பிய அவு சர்க்கரை சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்றாக கிளறி விடவும், நெய்யில் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து தாளித்தால் போதும். சுவையான பூசணிகாய் அல்வா ரெடி.


Spread the love
error: Content is protected !!