புரதம் அதிகரிக்க பருப்பின் பயன்கள்

Spread the love

அரிசி, கோதுமை போன்ற அடிப்படை ஆதார உணவுகளுக்கு அடுத்தபடியாக உடலுக்கு தேவைப்படுவது பருப்புகள். சைவ உணவில் மிக முக்கியமான பருப்புகள், புரதம் செறிந்தவை. அசைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் சுலபமாக இறைச்சிகளிலிருந்து கிடைத்து விடும். சைவ உணவினர்களுக்கு பாலும் பருப்பும் தான் புரதம்.

புரதம் இல்லாவிட்டால் உடல் வளர்ச்சி இல்லை. ஒரு கிராம் புரதம் 4.2 கலோரி சக்தியை தரும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. உணவு புரதங்களில் 23 அமினோ அமிலங்கள் (கினீவீஸீஷீ ணீநீவீபீs) உள்ளன. இவற்றில் 10 அமினோ அமிலங்களை உடல் உருவாக்கிக் கொள்ள இயலாது. எனவே இவற்றை உடல் உணவிலிருந்து தான் பெற வேண்டும். உணவு நிபுணர்கள் அசைவ உணவு புரதங்கள் தாவர புரதங்களை விட சிறந்தவை என்கின்றனர். அதனால் சைவ உணவுக்காரர்கள் பருப்புகள், பால், கொட்டைகள், சோயாபீன் என்று பலவித புரத சைவ உணவுகளை, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்புகளில், விமீtலீவீஷீஸீவீஸீமீ மற்றும் ஜிக்ஷீஹ்ஜீtஷீஜீலீணீஸீ எனும் தரமான புரத அமிலங்கள்

குறைவு. ஆனால் லிஹ்sவீஸீமீ பருப்புகளில் அதிகமாக உள்ளது. இதனால் தானியங்களையும், பருப்புகளையும் சேர்த்து உண்பதால் சிறந்த, தரமான புரதம் நமக்கு கிடைக்கும். எட்டு பாக தானியங்களுடன் ஒரு பாகம் பருப்புகள் சேர்ப்பது சரியான உணவுக்கலவை.

பருப்புகளை “சமிதானியங்கள்” என்கிறது ஆயுர்வேதம். தனியாக (அரிசி, கோதுமை போல்) உணவாக ஏற்பதில்லை. வாய்வுவை அதிகரித்து விடும். உணவின் துணைப்பொருளாக பருப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.


Spread the love