இருதயத்தை பாதுகாக்க

Spread the love

நமது உடலில்  எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன, சில உறுப்புகள் முக்கியமாக செயல்பட்டு வருவதால் தான் நீண்ட ஆயுள்வரை உயிர் வாழ்கின்றோம். அதில் ஒன்றுதான் நமது இருதயம். இது ஒரு உறுதியான தசை நார்களால் அமையப்பட்டது ஆகும். ஆகவே அவ்வளவு சீக்கிரத்தில் பழுதடைவதோ, பாதிக்கவோ ஆகாது. இருந்தாலும் சில வியாதிகள் , சில விசக் கிருமிகளால் இருதயம் தாக்கப்பட்டு இருதய பலவீனம், இதய வால்வுகள் பலவீனமடைதல், இரத்தக் குழாய் அடைப்பு, கொழுப்பு அதிக அளவில் சேர்ந்து விடுவதால் அதன் காரணமாக இரத்தக் கொதிப்பு (பிளட்பிரசர்), இரத்த ஓட்டம் குறைதல் அல்லது கூடுதல், இப்படி பல்வேறு பிரச்சனைகள் வந்து விடும்.இதயம் பலவீனம் காரணமாக மூட்டுவலி , மூட்டுகளில் வீக்கம், சிறுநீர் சரியாக வெளியேறாமை, பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, நரம்பு பலவீனம் போன்ற நோய்களும் வரலாம்.

இதயத்தின் செயல்பாடு

இதயம் தாமரை மொட்டு போன்ற வடிவமைப்பு கொண்ட 4 அறைகள்  கொண்ட பெட்டி போன்ற அமைப்பு உடையதாகும். இரத்தத்தின் தன்மை, நுரையீரலில் இருந்து கிடைக்கும் பிராணவாயு (ஆக்சிசன்) அளவு, சிறுநீரகத்ததின் இயக்கம், உண்ணும் உணவின் தன்மை இவற்றை பொறுத்து இருதயம் செயல்படும். பொதுவாக இரத்தம் சுத்தமாக ஆரோக்கியமாக இருந்தால் இருதயம் நன்கு செயல்படும்.

இருதயம் செயல் இழப்பது எப்படி?

 புளிப்பு  தன்மையுடைய உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது, மது மாமிசம், உணவு கட்டுப்பாடு இல்லாமல்  உண்பது , உடல் உழைப்பு இல்லாமை, கடின உழைப்பு செய்வதன் மூலமாக உடலுக்கும் இருதயத்திற்கும் தகுந்த ஓய்வு இல்லாமை, உடற் கழிவுகள் (வியர்வை, சிறுநீர், மலம், காற்று) உடலை விட்டு முறையாக போகாமல் இருப்பது இப்படி பல காரணங்களினால் இருதயம் வெகுவாக செயல் இழக்கின்றது.

இருதயத்தை பாதுகாக்க

  இருதயத்தை பாதுகாக்க இயற்கையாகவே பல நல்ல மூலிகைகள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது செம்பருத்தி, வெள்ளைத்தாமரை, கரிசலாங்கண்ணி.

 இருதயத்தில் வருகின்ற அடர்த்தியான கெட்டி இரத்தத்தை வெளி கடத்தும் போது ரொம்பவும் திணறும். மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தினை  குறைக்கவும், இரத்தத்தில் உள்ள அதிக சூட்டை சம நிலைப் படுத்தவும் செம்பருத்தியை தினமும் உபயோகிக்கலாம். தினமும் 10 செம்பருத்தி பூவின் இலைகள் மட்டும் எடுத்து காலை வெறும் வயிற்றில் தினறு 1 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். செம்பருத்தி  இலைகளை தின்பதற்கு கடினமாக இருந்தால் 20 செம்பருத்தி பூவின் இதழ்களை  மட்டுமே  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி பின்பு வடிகட்டி தேன் கலந்து சாப்பிடலாம். செம்பருத்தி இதழ் வெள்ளை தாமரை இதழ், ரோசா இதழ் இவை மூன்றையும் சம அளவு எடுத்து சேர்த்து இடித்துஅத்துடன் கற்கண்டையும், தேனையும் கலந்து காலை இரவு 2 தேக்கரண்டி சாப்பிடலாம்.   வெள்ளை தாமரை இதழ்களை கைப்பிடி அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் காய்ச்சி வடித்து, மருதம்பட்டை கசாயம் 1டம்ளர், சீந்தில், நன்னாரி, நெருஞ்சில் இலை சம அளவு எடுத்து  சர்க்கரை சேர்த்து காய்ச்சி வடித்து பின்பு ஒன்று கலந்து தேன் சுட்டி இருவேளை சாப்பிடலாம்.  மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு வர  இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை நீக்கும்.  அதைப்போல பூண்டு, வாழைத்தண்டு, எள்ளு, கொள்ளு, நெருஞ்சில், முள்ளங்கி இவைகளை உணவில் தினமும் சேர்த்தால் நல்லது . இரத்தத்தில் உள்ள உப்பைப்பிரித்து சிறுநீருடன் வெளியேற்றும்.  யூரியா போன்றவற்றை வெளியேற்றவும் செய்யும். இதனால் இரத்தம் தூய்மை அடையும். 100 கிராம் கரிசலாங்கண்ணிப்பொடி, 400 கிராம் தூதுவளைப்பொடி, 25 கிராம் முசுமுசுக்கை, 25 கிராம் நற்சீரகம் இவற்றை ஒன்றாக கலந்து காலை, மாலை பால் அல்லது தண்ணீருடன் 2 தேக்கரண்டி பொடியை சேர்த்து பனை வெல்லத்துடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.  வெங்காயத்தை மோருடன் கலந்து தினமும் தொடர்ந்து சாப்பிடுவது கொழுப்பின் அளவு குறைந்து இருதயத்தில், கோதுமை இவற்றை உணவாக கொள்ள  வேண்டும். எலுமிச்சம்பழம் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்த ஓட்டம் சரிப்படும். அதைப்போல சாத்துக்குடி பழச்சாறுடன் தேன் கலந்தும் குடிக்கலாம்.

இருதய நோயாளிகள் தினமும் கடைப்பிடிக்க வேண்டியவை

  தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அல்லது அருகம்புல் சாறு, எலுமிச்சம்பழச்சாறு, இளநீர் குடிக்கலாம். மதுவகைகள், உப்பு, காரம், அசைவ உணவு வகைகள், முட்டை புகைத்தல், புகையிலை மெல்லுதல்  இவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் எளிய உடற் பயிற்சி செய்ய வேண்டும். கடின உழைப்பு,அதிகமாக  உணவு  உண்ணுதல் செரிமானம் ஆக வெகு நேரம் பிடிக்கும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதிக எடை உள்ள பொருளை தூக்குதல், வேகமாகஓடுதல், குதித்தல்,  வேகமாக செல்லும் வாகனத்தில் போவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இயற்கையான உணவு முறைகள்

   தினமும்  உணவில் வாழைத்தண்டு , பூண்டு , முள்ளங்கி ,கொத்தமல்லி வெங்காயம், தேன் சேர்த்துக் கொள்ளலாம்.  கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சேர்க்கலாம். பழவகைகளில் எலுமிச்சம்பழம், திராட்சை, அத்திப்பழம், பேரிச்சம்பழம்,  மாதுளை, இளநீர் ஆப்பிள், அன்னாசி, தர்பூசணி, ஆரஞ்சு சேர்க்கலாம். சாறு வகைகளில் செம்பருத்தி இலைச்சாறு, அறுகம்புல் சாறு, வாழைத்தண்டுச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு குடிக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!