இயற்கையை கடவுளாக வழிபட்டு, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்த நாம் இன்று அன்னிய மோகத்தில் வீழ்ந்து நமக்கே தெரியாமல் சிறிது சிறிதாக நாமும் அழிந்து இயற்கையையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். நம் முன்னோர் சொல்லிவிட்டுப் போனதை அறியாமல் (அல்லது) அறிந்துகொள்ள நாட்டமில்லாமல், “உணவே மருந்து” என்பதை அறியாமல் “மருந்தே உணவு” என்ற தலைகீழான காலக்கட்டத்தில்,நாளரு நோயும், பொழுதொரு மருந்துமாக ஓடிக்கொண்டிருக்கிறோம் இதற்கெல்லாம் காரணம் என்ன?
தாராளமயமாக்கல் அல்லது உலகமயமாக்கல் என்ற ஒற்றைச் சொல்லில் நம் நாட்டில் நம்மால் அனுமதிக்கப்பட்ட உணவுக்கலாச்சாரம் தான் என்பதை நாம் நம்மை அறியாமல் பின்பற்றுவது தான். பீட்சா, பர்கர், நூடுல்ஸ், ஃப்ரைய்ட் ரைஸ் என்று இரசாயனக் கலப்படம் மிக்க இந்த உணவுகள் என்னென்ன பாதிப்புகளை நமக்குள் ஏற்படுத்தும் என்பதைக் காணலாம்.
நீரிழிவு நோய்
இதை அலட்சியம் செய்வதால் உடலின் இதர உள்ளுறுப்புகளைப் பாதிக்கப்படுகிறது.
ஞாபகசக்தி குறைதல்
கவனக்குறைவு, திட்டமிட்டு செயல்பட இயலாமை அல்லது செயல்படும் திறன் குறைதல் என்று பல பிரச்சினைகள்என மருத்துவ உலகம் கூறுகிறது. கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு, சில இரசாயனப் பொருட்களை சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளான பரோட்டா, சமோசா, பப்ஸ், நான் போன்ற உணவு வகைகளில் சுவையூட்டியாக சேர்க்கப்படும் அஜினோமோட்டோ என்ற இரசாயனம் சேர்க்கப்பட்ட பொருள் நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இதனால் தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு, உணவிற்கு ஏங்குதல் போன்றவையும் வயிற்று வலி, மூட்டுவலி, நரம்புகள் பாதிப்பு, விபரீத உணர்ச்சிகள், மனம் மற்றும் உடலை கட்டுப்படுத்த இயலாமை போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைகின்றனர்.இதற்கு பல காரணிகளிருந்தாலும், முதலாவதாக வருவது அவர்களின் உணவுப் பழக்கமேயாகும்.
துரித உணவுகளில் சுவை கூட்டியாகச் சேர்க்கப்படும் சில இரசாயனப் பொருட்கள் பெண்களுக்கு பருவமடைய உதவும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை அதிகமாக சுரக்கவைப்பது சிறு வயதிலேயே பெண்களை பருவமடைய காரணமாக இருக்கிறது.
உடல் எடை அதிகரிப்பு
தினசரி இந்த துரிதவகை உணவுகளை சாப்பிடுபவர்களின் உயிரணுக்கள் பாதிக்கப்படுகிறது, உடற்பருமனால் அவதிப்படுகிறார்கள்
வருமுன் காப்போம்
நாளை வரப்போகும் இன்னல்களை அறிந்துகொள்ளாமல் / இன்றைய இந்த துரித உணவுப்பழக்கத்தில் உழன்று தவிக்கும் வருங்கால சந்ததியினருக்கு நம் பாரம்பரிய உணவு முறை பற்றி எடுத்துச்சொல்லி பட்டாணி, பயிறு, காய்கறிகள், பழவகைகள், உலர் பழங்கள் இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் ஆரோக்கியத்திற்கு இன்றே நாம் வழிவகுக்கலாம் வாருங்கள் நண்பர்களே.
சத்யா