ஒரே வாரத்தில் இளநரையை போக்க எளிய வழி..

Spread the love

தலைமுடி பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே போகின்றது.  முடி கொட்டுவது எந்த அளவிற்கு ஆபத்தான விஷயமோ அதே மாதிரி நரை முடி வளர்வதும் ஆபத்தான விஷயம்தான்.. அதுவும் இளம் வயதில் வரும் நரை முடி மிகவும் கொடுமை.. என்னதான் சால்ட் அண்ட் பெப்பேர் என்று கெத்தா சொல்லிக்கிட்டாலும், உள்ளுக்குள் ஏண்டா இப்படி இந்த நரை முடி மானத்தை வாங்குது என்று கவலைபடுகிறவர் அதிகம்..

இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தோம் என்றால்?  பரம்பரை பரம்பரையாகவும் இது தொடரும்,  அதாவது, parents கு,  தலை முடிக்கு நிறம் தர,  மெலானின் குறைபாடு இருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கும், தலை முடி நரைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

பின் உடலில் சுரகுரா தைராய்டு சுரப்பி, அளவுக்கு அதிகமாகவோ, இல்லை குறைவாகவோ சுரந்தால் தலை முடி நரைக்கும். சில பேருக்கு உடல் சூடு அதிகமாக இருந்தாலும் முடி நரைக்கும். அதோடு , வைட்டமின் பி , கே குறைபாடும் நரை முடிக்கு காரணமாயிருக்கும்.  இந்த வைட்டமின் கே, நாம் தினமும் பயன்படுத்தி வரும்  கறிவேப்பிலை,நெல்லிக்காய், சுண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், போன்ற காட்டு காய்கறிகள்,  நாவல் பழத்திலும் உள்ளது.   இரத்த சோகையும் இள நரைக்கு ஒரு பொதுவான காரணம்.

இள நரையை போக்க சில எளிய தீர்வுகளை பார்க்கலாம்.. நாம் தினமும் சமையலிற்கு பயன்படுத்தி வர கருவேப்பிலை முடியையும், கண்ணையும் பாதுகாக்கும். மேலும் இளநரை,  முடி உதிர்வதையும் இது தடுக்கும்.   

உணவில், கருவேப்பிலையை, சட்னியாகவும் துவையலாகவும் சேர்த்து கொள்ளலாம். இதன் முழு பயன் கிடைக்க, கருவேப்பிலையை பச்சையாகவே அரைத்து, பயன்படுத்த வேண்டும். 

கருவேப்பிலை மாதிரியே,  கரிசலாங்கண்ணி,  பொன்னாங்கண்ணி,  கீரைகளும், முடி கருமையாக வளரவும்,  நரை வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.  இந்த இரண்டு கீரைகளையும், இரண்டு மாதம் வரை, முடிந்த வரை பயன்படுத்தி வந்தால்,  உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சியாகி, தலை முடியும் ஆரோக்கியமடையும். அடுத்து கருவேப்பிலையை, பச்சையாகவே வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். 

மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை இந்த மூன்றையும், சம அளவில் சேர்த்து விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசி குளித்தால்,  இள நரையான முடி கறுப்பாகும். இதே போல், கரிவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரையும் பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு, பச்சை துளசியை எடுத்து, அதை ஒரு கப் தண்ணீரில் காய்த்து, அந்த தண்ணீரை எடுத்து லேசான சூட்டோட,  தலையில் முடிக்காலில் இருந்து நுனி வரை ஊற்றி தடவி வந்தால் தலை முடி கறுப்பாகும்.

ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து,  அதை மைபோல அரைத்து, அதோட அம்பது மில்லி தேங்காய் எண்ணெயும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து காய்த்தால் வர கூடிய எண்ணெயை எடுத்து வடிகட்டி, தினமும் குடிக்க போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால்  தலையில் தேய்த்து குளித்து வந்தால் இள நரை நீங்கும். 

தோல் எடுத்த இஞ்சியை சீவி, அதனுடன் சிறிது தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன்சாப்பிட்டால் தலை நரை நீங்கும்…பொதுவாக நம் உடலில் இருக்கும் பல சுரப்பிகள், குறிப்பிட்ட கால அளவு வரைதான் சிறப்பாகசெயல்படும். ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பின், முடிக்கு நிறம் தரும், மெலானின் படிப்படியாக குறைந்து, நின்றுவிடும். ஆனால் இளம் வயதில் முடி நரைத்தால்? அதை தடுத்து சரிபடுத்தலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love