ஒரு பெண் தாய்மை அடைந்து குழந்தையை பெறுவது மட்டும் போராட்டம் அல்ல, மீண்டுவரும் வாழ்க்கை முறையில் தாய்மை அடைவதும் ஒரு போராட்டமாக தான் இருக்கின்றது. அப்படி தாய்மை அடைந்திருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். குழந்தையின் பிறப்பை எளிமையாக்கவும், குழந்தையின் எடையை அதிகரிக்கவும், கர்ப்பிணி பெண்களின் இரத்த சோகையை தடுக்கவும், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புசத்து முக்கியம்.
அதோடு தாய்பால் சீராக சுரக்கவும், சுண்ணாம்பு சத்து அவசியம், அதனால் தாய்பால் ஊட்டும் பெண்கள் உணவில் பால், தயிர், பாலாடை, பச்சை கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் கடல் உணவுகள், சரிவர எடுத்து வரவேண்டும். வயிற்றில் குழந்தை சரியாக வளர, உயிர் சத்தாக இருக்ககூடிய ஏ, b-12 மற்றும் வைட்டமின் C உணவுகளை சேர்க்க வேண்டும். பிரசவ நேரத்தில் உள்ள இரும்புசத்து குறைபாடு, தீமையை உண்டாக்கும். இதனால் குழந்தை ஆரோக்கியம் இல்லாமல் பிறக்க நேரிடும். அதற்கு கீரை, பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றில் இரும்புசத்து அதிகமாக நிறைந்திருகின்றது.
அதோடு இறைச்சி, முட்டை, மீன், இது மூலமாகவும் இரும்பு சத்து கிடைக்கும். நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை இவற்றில் வைட்டமின் c இருப்பதனால் அது இரும்பு உறிஞ்சுதலுக்கும் துணையாக இருக்கின்றது. கருச்சிதைவு மற்றும் குழந்தை உடல் வளர்ச்சி குறைவிற்கு அயோடின் சத்து குறைபாடும் காரணமாக இருக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் அயோடின் உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதனால் குழந்தை பிறப்பிற்கு முன்பாகவும், பிரசவத்திற்கு பின்பாகவும், தேவையான வலிமையோடு இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம், ஊட்டச்சத்தோடு சீக்கிரம் செரிக்ககூடிய உணவுகளை .உணவு அட்டவணையில் சேர்த்துக்கொள்வது நல்லது.