கர்ப்பிணிப் பெண்களுக்கு

Spread the love

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள  குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் சுரக்க:

பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே மிகச்சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும்.  தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகம். குழந்தை பிறந்தது முதல்  தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது என்பது மிக மிக அரிதாகி வருகிறது. மேலும், சில பெண்களுக்குத் தாய்ப்பால் சரியாக  சுரப்பதில்லை. இவர்கள்காலையிலும் மாலையிலும் ஒரு பேரிக்காய்தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

வாய்ப்புண் குணமாக:

சாதாரணமாக வயிற்றில் புண் இருந்தால்,  வாயில் புண் ஏற்படும். இப்படி வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்கள் விரைவில் குணப்படும்.

வயிற்றுப்போக்கு குணமாக:

உண்ணும் உணவுகளின் ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப்போக்கு உண்டாகும். தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை சிறுநீரகத்தில் சிறு சிறு கற்களாக மாறுகின்றன. இவற்றைக் கரைத்து வெளியேற்றுவதற்கு தினமும் இரண்டு பேரிக்காய்களைச் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

பேரிக்காயின் மருத்துவ குணங்கள்:

உடல் சூட்டைத் தணிக்கும்.

கண்கள் ஒளிபெறும்.   

நரம்புகள்புத்துணர்வு ஏற்படும். 

தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குணமாகும்.                                                    

குடல் மற்றும் இரைப்பைகளுக்கு தேவையான பலம் கிடைத்து உடலை வலுவாக்கும்.

பேரிக்காய் கிடைக்கும் பருவங்களில் அதன் அருமைகளைத் தெரிந்துகொண்டு மருத்துவப் பயன்களை முழுமையாகப்பெறுவோம்.


Spread the love
error: Content is protected !!