பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் கர்ப்பமாக இருப்பது. இன்னொரு புது உயிரை இந்த பூமிக்கு தருவதற்கு காத்திருக்கும் தருணம் அது. அந்த சமயத்தில் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் . எவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்கிற அறிவுரையைத் தான் இதுவரை கேட்டிருப்போம் . ஆனால் , கர்ப்பமாவதை ஊக்குவிக்கும் உணவுகள் குறித்து அவ்வளவாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கர்ப்பமாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிற பெண்கள் இந்த உணவுகளை உட்கொள்ளலாம் இவை என்னென்ன என்று பார்க்கலாம்.
பீன்ஸில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. இதை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரித்து, எளிதில் கர்ப்பமாக வழிவகுக்கும். ஆகவே இந்த உணவைப் பொருளை கர்ப்பமாக முயற்சிக்கும் போது உணவில் அதிகம் வாருங்கள்.
கர்ப்பமாக முயற்சிக்கும் தருணங்களில் முழு தானியங்கள் உணவுகள் எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள் ஏனெனில் முழு தானிங்களில் ஆன்டி& ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்து அதிகம் இருக்கும் ஆகவே தினமும் 6 அவுன்ஸ் முழு தானயங்களை உணவில் சேர்த்து வந்தால் கர்ப்பம் விஷயத்தில் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கலாம்.
மீன்களில் சால்மன் , கெளுத்தி இரால் மற்றும் சூரை மீன்கள் போன்றவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் மேலும் , மீன்களில் ஒமேகா &3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால் அது ஆரோக்கியதான சிசுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
கீரை வகைகளான பசலைக்கீரை, லெடுயூஸ், ப்ராக்கோபி, போனறவற்றில் ஃபோலேட் வளமாக இருப்பதால் இதனை ஆண்கள் உட்கொண்டால், விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கோதுமை பிரட் இதயத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும். இதனால், இனப் பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன்கள் சீராக செயல்பட்டு, எளிதில் கர்ப்பமாக முடியும். எனவே வெள்ளை பிரட்டை தவிர்த்து, கோதுமை பிரட்டை உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆலிவ் ஆயிலில் இன்சுலின் சென்சிட்டி விட்டியை அதிகரிக்கும் மற்றும் உள்காயங்களை குணப்படுத்தும். மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆகவே, இதனை உணவில் சேர்க்கும்போது, உடலின் இனப்பெருக்கம் உறுப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.