கர்ப்பிணிகளுக்கு சத்துணவு

Spread the love

கர்ப்பக் காலத்தில், பெண்கள் ஒரு சில குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டும் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியில் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்த நேரத்தில் சாப்பிடக் கூடிய உணவு எது? நாம் எந்த வகையில் ஆரோக்கியத்தைப் பேணிக் கொண்டால், அது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் வளர்ச்சி தரும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன தான் ஆரோக்கியமான உணவுகளை, சத்துக்கள் உள்ள உணவுகளை கர்ப்பிணிப் பெண்களை சாப்பிட்டு வந்தாலும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்குத் தேவையான வைட்டமின்களை கூடுதல் உணவாக மருந்துகளின் மூலம் (மாத்திரை, டானிக்) சேர்த்துக் கொள்ளவேண்டும். எப்பொழுது முதல் வைட்டமின் மாத்திரை/ டானிக்கை கர்ப்பக் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்? கர்ப்பம் தரித்த காலத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

சினை முட்டையானது வெளியிடுவதற்கு மூன்று மாதங்கள் முன்னரே முதிர்ச்சியைத் துவங்கி விடுவதால், ஆரம்ப கால நிலையில் சரியான சத்துக்கள் அந்த நேரம் இல்லாத பொழுது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. நரம்புக் குழாய் பிரச்சனை போல கர்ப்பமுற்ற முதல் நான்கு அல்லது ஆறு வாரங்களில் ஏற்படக் காரணமாக விடுகிறது. ஆகவே பெண்கள் கர்ப்பமுற்றது தெரிந்த உடன் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் அமிலம் தினசரி 600 மைக்ரோ கிராம் அளவு தேவைப்படுகிறது.

ஜி.பி. முருகன்


Spread the love