பெண் மனதில் தில் … தில் …

Spread the love

பெண் என்பவள் மிகவும் மென்மையானவள். விரைவில் உணர்ச்சி வசப்படுகிறவள். இளகிய மனதை உடையவள். பல பொறுப்புகளை சுமப்பவள் மனைவியாக தாயாக, மகளாக, சிறந்த நிர்வாகியாக எந்த வேலை எடுத்தாலும் அதற்கு பொருத்தி திருத்தமாக செய்பவளாக என பல கோணங்களில் நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என ஓர் பழமொழி, ஒவ்வொரு வெற்றி ஆணிற்கும் பின் நிச்சயமாக ஓ£ பெண் இருப்பாள் என்கிற பழமொழி. பெண்ணின் மனம் கடலினும் ஆழமானது என்ற வாக்கியமும் பெண்ணை நினைத்து வியக்க வைப்பது உண்மையே. ஆனால், உண்மையில் பெண் பெண்ணாக இருந்தால் தான் அனைவருக்கும் நல்லது. அதாவது பல கோணங்களில் அவளின் அழகையும், அறிவையும், நிர்வாகத்தையும் பாராட்டுபவர்கள். அவள் ஓர் நோயாளியாக இருந்தால் எல்லோருக்கும் நஷ்டம் தான்.

ஒவ்வொரு பெண்ணை நம்பி வீடு உள்ளது. அந்த வீட்டின் ஒவ்வொரு அசைவும், நல்லது கெட்டது என அனைத்து விஷயங்களும் அந்த பெண்ணின் கையில் தான் உள்ளது.

அதாவது ஓர் சிலந்தி வலை போல் பின்னப்பட்டுள்ள அந்த சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் ஆரோக்கியம் தான் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால், நம் சமுதாயத்தில் பெண்ணிற்கு எந்தளவு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் நிச்சயமாக அது மிகவும் குறைந்த சதவிதமாகத்தான் இருப்பார்கள். ஆம் எங்களிடம் வரும் பல பெண் நோயாளிகளின் பிரச்சனைகள் மனதளவில் பெரிதான பின்பே உடலை தாக்குகின்றது. சிலருக்கு உடல் நல்ல ரீதியில் தேறி வந்தாலும் மனதளவில் மிகவும் நோயாளியாகவே இருக்கிறார்கள். பலரின் வாக்கு மூலங்கள் வேதனைக்குரியது. வீட்டில் கணவன், பிள்ளைகள், மாமியார், மாமனார் போன்றவர்களின் அரவணைப்பு சரிவர கிடைக்காமல் அதற்கு மாறாக உபத்திரங்களே அதிகம் கிடைத்து, மனதால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு சில பெண்கள் என்றால் மற்றவர்களுக்கு எல்லாம் சரியாக இருந்தும், குழப்பங்கள், சந்தேகங்கள், வீண்கற்பனைகள் என தன்னையும் குழப்பி, குடும்பத்தினரையும் குழப்பி மனதால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? நிச்சயமாக நாமே தான் காரணம். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே பல பொறுப்புகளில் அமர்த்தி கொள்ளும் போது, மனதை இலகுவாக வைத்து கொள்வதே நல்லது. நடக்கவிருக்கும் எந்த செயலிலும் கவனம் இருக்கனுமே ஒழிய சந்தேகம், குழப்பம் வருத்தம் இருக்கக்கூடாது.

இவ்வாறு தன்னைத்தானே எடை போட்டு செயல்களை செய்ய முடியாத பெண்கள், அதிலும் வெளி உலகம் தெரியாமல், படிப்பறிவு இல்லாத அரவணைப்பு இல்லாத பெண்கள் மனதால் பாதிக்கப்படும் போதே உடலில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. உதாரணத்திற்கு அதிக கவலை, பயம் போன்ற உணர்ச்சிகள் ‘பசியை’ தவிர்க்கின்றது. இதன் பாதிப்பு நேரத்திற்கு பசிக்காது. சாப்பிட தவறுகிறார்கள். இதன், பலன் அக்குபஞ்சர் தத்துவப்படி, ‘சிறுகுடலை பாதித்து அதன் ஜோடி உறுப்பான (இன்&யாங் தத்துவப்படி) இருதயத்தை பாதிக்கின்றது. பின்னர் ஓர் காலகட்டத்தில் அந்த பெண்ணிற்கு இருதய படபடப்பு, கை, கால் நடுக்கம், குறைவாக இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. இதே நிலைமை நீடிக்கும் பொழுது காலையில் மயக்கம் ஏற்பட்டு அடிக்கடி வேர்த்து கொட்டுகின்றது. நாளடைவில் ஓர் நிரந்தர நோயாளியாகி மாத்திரை மருந்துகளை உட்கொண்டு தூக்கமும்    கெட்டு விடும். சரி இவ்வளவும் நடப்பதற்கு முன்பு சிந்தித்து செயல்படலாம். ஆனால், வந்த பின்பு என்ன செய்ய வேண்டும். நிச்சயமாக இயற்கை முறையாக அக்குபஞ்சர் நிபுணரைத்தான் நாட வேண்டும். ஆம் அக்குபஞ்சர் தத்துவத்தில் உடலிற்கு மட்டும் மருத்துவம் கிடையாது. நம் மனதில் உணர்ச்சிகளுக்கும் அக்குபஞ்சர் மருத்துவம் மிகச் சிறந்த பயனை தரும். மனிதனுக்கு எந்த ஒரு உணர்ச்சியும் நியாயமாகதான் இருக்க வேண்டும்.

அதிகமான கோபம், பயம், அழுகை, சந்தேகம் போன்றவை உடலிலுள்ள உள் உறுப்புகளின் குறைபாடுகளையே குறிக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அக்குபஞ்சர் தத்துவத்தில் ஒவ்வொரு உறுப்பிற்கும் எந்த வகை உணர்ச்சி என வகுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நுரையீரல் மற்றும் பெருங்குடல் உறுப்பிற்கு ‘வருத்தம்’ என்றும் இருதயம் சிறுகுடல் போன்ற உறுப்புகளுக்கு சந்தோஷம் என்றும் கல்லீரல் பித்தப்பை உறுப்புகளுக்கு ‘கோபம்’ என்றும், மண்ணீரல் இரைப்பை உறுப்புகளுக்கும் மனகவலை என்றும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளுக்கு ‘பயம்’ என்கிற உணர்ச்சியும் வகுக்கப்பட்டுள்ளது. மன பிரச்சனைகளால் வரும் நோயாளிகளின் நாடி பரிசோதனைக்கு பின் சம்மந்தப்பட்ட உறுப்பின் முக்கிய புள்ளிகளை தூண்டும் போதும், உடலை அமைதியாக்கின்ற ‘பாய்குய்’ இன்&யாங் சென்மென், நெய் குவின் போன்ற புள்ளிகளையும் தூண்டும் பொழுது நிச்சயமாக 10 நாட்களில் பலன் தெரியும். இது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் வரும் மன அழுத்தத்தையும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்தலாம். பொதுவாக இந்த வகை பெண்கள் தங்களையும் கஷ்டப்படுத்தி, குடும்பத்தினர் அனைவரையும் குழப்புவார்கள், மாமியார், மருமகள் பிரச்சனைகள் பெரும்பாலும் இதனால் தான் வரும் என்றே கூறலாம். யாரைப் பார்த்தாலும் குற்றம் சொல்லுதல் சந்தேகம் கொள்ளுதல் டென்ஷன், உடல் வலி, தலை சுத்தல் என அதிகம் உபாதைக்குள்ளாவர்கள். இதனை மெனோபாஸ்ல் டிப்ரெஷன் (விமீஸீஷீஜீணீusணீறீ ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) என கூறுகிறோம். மிக எளிதாக குணமாக்கக்கூடிய இந்த பிரச்சனையை அக்குபஞ்சர் மருத்துவத்தில் கையாளலாம். சமீபத்தில் எங்களிடம் வரும் பெண் நோயாளிகளின் 90% பிரச்சனைகள் அவர்களின் கருப்பையை சுற்றியே இருந்தது. காரணம் என்னவென்றால், மனம் எந்தளவிற்கு பாதிப்புக்குள்ளாகிற அந்தளவிற்கு மாதவிடாயையும் பாதிக்கிறது. மன அழுத்தம் அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சுரப்பு புள்ளிகளாக லிமி18 நிஙி21 போன்ற புள்ளிகளை தூண்டும் போது குணமளிக்கும். இவற்றுக்கெல்லாம் மேலாக பிரசவத்தின் சிசேரியன் போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு கர்ப்ப ரேகையானது (ஸிமீஸீ விமீக்ஷீவீபீவீணீஸீ) பாதிக்கப்பட்டு அது சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாக கருப்பை பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் வயிற்று ஜீரண பிரச்சனைகள், நுரையீரல் பிரச்சனைகள் குரல் மாற்றம், சுரபி குறைபாடுகள் ஏற்பட காரணமாகின்றது.

மேற்கண்ட பிரச்சனைகள் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களில் 100&க்கு 90 பேருக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் சிசேரியன் செய்து தான் ஆக வேண்டும். சிசேரியன் செய்துக் கொண்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அக்குபஞ்சரின் ஸிமீஸீ விமீக்ஷீவீபீவீணீஸீ தேவையான புள்ளிகளை தேர்ந்தெடுத்து சிகிச்சையளித்தால் மிக நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும்.


Spread the love