உலகிலேயே அதிகம் முயல்கள் வாழும் பகுதி வட அமெரிக்காதான். இங்குஉள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அதிகமாக முயல்கள் வாழுகின்றன. உலகில் வாழும் முயல்களில்50 சதவிகித முயல்கள் வட அமெரிக்கா வனப் பகுதிகளில் தான் வாழுகின்றன.அதனால்தான், நாம் நம் வீடுகளில் நாய்களை செல்லப் பிராணிகளாகவளர்ப்பதைப் போல வட அமெரிக்க வீடுகளில் அனேக வீடுகளில் முயல்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர். அதிக முயல்கள் வாழும் பகுதி வட அமெரிக்கா என்றால், முயல்களே வாழாத பகுதி யூரேஷியா எனப்படும் ஐரோப்பியா மற்றும்ரஷியாவின் சில பகுதிகளாகும்.
வடஅமெரிக்க வனப் பகுதிகளில் முயல்கள் அதிகம் வாழுகின்றன என்றால் அங்கு பிற விலங்குகளே இல்லை என்று அர்த்தமல்ல. அங்குள்ள வனப் பகுதிகளில் அதிக விலங்குகள் இருக்கின்றன. ‘சிங்கம், புலி போன்ற முயல்களை உண்டு வாழும் மிகப் பெரிய மிருகங்களும் இருக்கின்றன. அதே சமயத்தில் அங்குள்ள சீதோஷண நிலையும் அங்குள்ள தாவர இனங்களும் முயல்கள் வளர்வதற்கு ஏற்றதாக இருக்கின்றன. முயல்கள் அங்கு வாழும் மிருகங்களிடமிருந்து சாதுர்யமாக தங்களைக் காத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன.
முயல்களை அழகிய வண்ணங்களைக் கொண்டவை அதிவேகமாக ஓடக் கூடிய கால்களைக்கொண்டவை. புஸ்புஸ் என பஞ்சு போன்ற ரோமங்களைக் கொண்டவை. நீண்ட காதுகளைக் கொண்டவை. முயல்கள்9&12 வருடம் வரையே உயிர் வாழக் கூடியவை. ஆனால், வாழும் ஒவ்வொரு நாளும் நாம் பிற விலங்குகளிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என கவனமாக வாழ்பவை. அதன் கண்கள் மிகவும் கூர்ந்து பார்க்கக் கூடியவை. அந்தக்கால்களின் அமைப்பு அவற்றினை எல்லாத் திசைகளை பார்க்க வைக்கின்றது. காதுகள் துல்லியமாககேட்கக் கூடியவை. பிற விலங்குகள் வருவதை துல்லியமாக கவனித்து அவைகளிடம் இருந்து தப்பிக்கவைக்கின்றன. முயல்கள் மிகவும் கவனமாக வாழக் கூடிய விலங்கினம். பிற விலங்குகளிடமிருந்துதங்களை காத்துக் கொண்டு மிக சாமார்த்தியமாக வனப் பகுதிகளில் வாழுகின்றன. அவை குறைவாகத்தூங்குகின்றன. அனேக நேரம் தங்களைத் தாக்கும் பிற விலங்குகளையே நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். இவை கிடைக்கின்ற சிறு சிறு புல் பூண்டுகளை குறைவாக உண்டு வாழுகின்றன.
முயல்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது, அது என்னவென்றால் இருக்கின்றவற்றை வைத்து நிறைவாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கைப் பாடம்.
முயல்கள், பிற மிருகங்களே காடுகளில் இருக்கக் கூடாது அப்பொழுது தான் தன்னால் வாழ முடியும் என்று கூற முடியாது, என்று சொல்ல முடியாது. ஆனால் நாமோ, ஏதேதோ காரணங்களைக் காட்டி நமது முன்னேற்றங்களுக்கு நாமே முட்டுக்கட்டை போட்டுக் கொள்கின்றோம். வாழ வேண்டும் என்ற தீராத தீ நம்முள் எரிந்து கொண்டே யிருக்க வேண்டும் அப்பொழுது தான் நம்மால் வாழ முடியும்.
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள்போன்றவர்கள் முயலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது தான் & நம்பிக்கை. எத்தகைய போராட்டமான வாழ்க்கையானாலும் எதிர் நீச்சல்போட வேண்டும், என்ற தளராத மனம் வேண்டும். முயல்கள் சிங்கத்திடம்போட்டி போட்டுக் கொண்டு வாழத் தானே செய்கின்றன. எத்தகைய பிரச்சினையானாலும் ஏன் நம்மால்மட்டும் அதனை எதிர்த்து வாழ முடியாது, முடியும். முயல்வோம் வெற்றி பெறுவோம்.