படங்களும் பாப்கார்னும்

Spread the love

சினிமா தியேட்டருக்குச் செல்ல நேர்ந்தால் இடைவேளையில் வெளியில் வந்து பாப்கார்ன் வாங்கிச் சாப்பிடுவது ஏதோ பழக்கம் போல ஆகிவிட்டது. சினிமா தோன்றியவுடன் தோன்றியது பாப்கார்ன் என்று நீங்கள் கருதினால் அது உங்களது தவறு அல்ல. அந்த அளவிற்கு பாப்கார்னும் சினிமா தியேட்டர்களும் ஒன்றிவிட்டன.

சமீபகாலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பாறைப் படிமங்கள் அக்கால மனிதன் பாப்கார்ன் உண்டு வாழ்ந்ததும் அவன் பல் இடுக்குகளில் பாப்கார்ன் துகள்கள் மாட்டியிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே சினிமாவிற்கும் சினிமா தியேட்டர்களுக்கும் பாப்கார்னுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தற்காலத்தில் பாப்கார்ன், சென்னை போன்ற பெரு நகரங்களில் சுமார் ரூ. 20 முதல் ரூ. 200 வரை திரை அரங்குகளில் விற்பனை செய்யப்படுகின்றது. பாப்கார்ன் இயற்கையான பொருள் என்றாலும் உடலுக்கு உகந்தது என்றாலும் அதில் சேர்க்கப்படும் வெண்ணெய், நெய், மசாலா போன்றவை அதனை ஒரு ஜங்க் ஃபுட் யிuஸீளீ யீஷீஷீபீ ஆக்கி விடுகின்றது. அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக அதில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் பல உடல் நலக் கேடுகளை உண்டாக்கக் கூடியவை. அவற்றின் மூலம் கிடைக்கும் எரிசக்தி (சிணீறீஷீக்ஷீவீமீ) சுமார் 4 வேளை இறைச்சி உணவிற்கு சமமானது. இணையத்தளத்தில் பாப்கார்ன்னில் சேர்க்கப்படும் சேர்மானங்களால் ஏற்படும் தீமைகளுக்கு என்றே தனியான இணைய தளங்களும் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இயற்கையாக பாப்கார்ன் தயாரித்து அதனை உட்கொண்டால் அது மிகவும் உகந்தது. எந்த தீங்கும் விளைவிக்காது வரும் மாதங்களில் அது எப்படி என்று அறிவோம்.

வீட்டில் செய்யும் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்

காய்ந்த சோளம்          50 கிராம்

எண்ணெய்                1 தேக்கரண்டி

உப்பு                      தேவையான அளவு

செய்முறை

குக்கரை எடுத்து கொள்ள வேண்டும், அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய்,உப்பு மற்றும் சோளத்தை போட்டு, அது பொரிந்து வெடிக்க தொடங்கிய உடன் மூடியால் முடிக்கொள்ள வேண்டும்.

வெடிக்கும் சத்தம் கேட்டதும் அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு குக்கரை திறந்து பார்த்தால் பாப்கார்ன் தயார்.


Spread the love
error: Content is protected !!