நீர்சத்தும், இரும்புசத்தும் அதிகமாக கிடைக்க கூடிய பொருள் தான் கீரை மருத்துவ பலன் தருவதோடு உடலையும், உள்ளத்தையும், பிரகாசமாக்க கூடிய தன்மை, பொன்னாங்கண்ணி கீரையில் அடங்கியிருக்கின்றது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் சி, ஏ நிறைந்திருக்கின்றது. எவரும் வேண்டும் என்று அசுத்த காற்றை சுவாசிப்பதில்லை.
ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலை, கிராம புறங்களில் கூட சுத்தமான காற்றை சுவாசிப்பது கேள்வி குறிதான். அப்படி உணவிலும், காற்றிலும், இருக்கும் அசுத்தம் நமது உடலில் ஊடுருவும் போது, இரத்தத்தில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அடிக்கடி c சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
பொன்னாங்கண்ணி சாற்றை நல்லெண்னையுடன் சேர்த்து தைலம் போல் காய்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர உடல் சூடு, கண் எரிச்சல் போன்ற பிரட்சனைகள் தீர்ந்து உடலிற்கு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது. மண்ணீரலில் ஏற்படும் கோளாறுகளை போக்கவும் பொன்னாங்கண்ணி அதிசிறந்த மருந்தாக இருக்கும். இது மூல நோய், கண்பார்வை குறைபாடு இவற்றிற்க்கெல்லாம் பண்டைய காலத்தில் இருந்தே இந்த கீரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அதோடு இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்வை கொடுக்கின்றது.
பொன்னாங்கண்ணியில் இருக்கும் மற்றொரு மகத்துவம் கால்சியம், இது எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்க்கும் மிகவும் நல்லது. மூல நோய் குணமாக பொன்னாங்கண்ணி கீரையோடு 5௦ கிராம் வெங்காயம், மற்றும் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலநோய் படிப்படியாக குறையும். கூந்தல் உதிர்வு, மற்றும் பொடுகு பிரட்சனை உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயோடு பொன்னாங்கண்ணி சாற்றை சேர்த்து தலையில் தேய்த்து வர கூந்தல் வலுபெற்று, தலைமுடி சீராக வளரும். உடல் மெலிந்து இருப்பவர்கள் இந்த கீரையோடு மிளகு, உப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.