மாதுளம்பழம்ஜுஸ் குடிப்பதற்கு முன்னால் அதில் என்ன உள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டும். முதலில்இந்த ஜுஸில் ஆன்தோசியானின் ஆசிட், காலிக் ஆசிட் மற்றும் பிலேவனாய்டு போன்ற உயர்வகைஆண்டியாக்சிடன்ட் உள்ளது. இது சர்க்கரை நோய்க்கும், இதய கோளாறுக்கும் அதி சிறந்தமருந்து.
குறிப்பாக மாதுளை ஜூஸ் ஆதெரோசெலரோசிஸ் என்ற கடினமான இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் இதயம் மற்றும் மூளைக்கு செல்ல கூடிய இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்தகூடிய தமனிகளின்அடைப்பையும் சரி செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் இந்த ஜீஸில் இருக்கும் ஆண்டி-ஆத்தெரோஜெனிக்தாக்கம், இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளைஉற்பத்தி செய்கிறது. இதனால் இதய செயல்பாடு சீராகி ஆரோக்கியமாக இயங்கும்.
மாதுளையில்இருக்கும் பிரக்டோஸ் எந்த விதத்திலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டாது. சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 2 வாரம் இந்த ஜீஸ் குடித்து வந்தால், சர்க்கரை அளவுகட்டுபடும் என்று கூறுகின்றனர். இதய நோயாளிகளுக்கு மாதுளை ஜீஸ் நல்ல ஆரோக்கியமானபானமாகும். இதனால் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்க முடியும். இதில் இருக்கும் ஆஸ்பிரின்,இரத்தம் உறைதலில் இருந்து தடுத்து கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
மாதுளைஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால், இதில் இருந்து கிடைக்க கூடிய ஆண்டியாக்சிடன்ட்,இலவச Radical அகற்றி, கேன்சரின் பெருக்கத்தை தடுக்கும். இரத்தத்தில் இருக்கும்நச்சுகளை வெளியேற்றி, நமது உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தீவிரப்படுத்துகின்றது.புராஸ்டேட் கேன்சரையும், மார்பு கேன்சரையும் தடுப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் மாதுளைஜூஸ் குடிக்கலாம். டயரியா நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் பரிந்துரைக்கபடுகின்றது. மாதுளையில்இருக்கும் என்சைம் செரிமானத்தை சீராக்கி, அஜீரணத்தையும் சரி செய்யும் ஆற்றலைகொண்டுள்ளது.
https://www.youtube.com/embed/qzv25yxp3Zk