யார் பித்த உடம்புக்காரர்கள்

Spread the love

போன மாதம் மூன்று தோஷங்களையும், குறிப்பாக வாத பிரக்ருதிகளின் குணாதிசயங்களை பார்த்தோம். மூன்று தோஷங்களில் இரண்டாவதாக, பித்த பிரக்ருதிகளை பற்றி இப்போது பார்ப்போம்.

உடலில் பித்தமிருக்குமிடம்

பித்தம் உடலில் நாடிக்கும், இதயத்திற்கும் நடுவில் பொதுவாக இருக்கும். வயிற்றிலும், சிறுகுடலிலும், வியர்வையிலும், இரத்தத்திலும், கண்ணிலும், தோலில் அதிகமாக உள்ளது. மத்திய வயது உள்ளவர்களுக்கு பித்தம் தலை தூக்கியிருக்கும். இதனால் ரத்தக்கொதிப்பு, மன உளைச்சல், அல்சர் இவை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பித்தம் உடல் சூடு, ஜுரணம் இவற்றுக்கு பொறுப்பானது. சிறுகுடலில் பித்தம் அதிகமானால், உடல் ரத்தம் முழுவதும் பாதிக்கப்பட்டு, நோய்கள் ஏற்படும்.

பித்த குணாதிசயங்கள்

 1. பித்த மனிதர்கள் சராசரி உயரம், சராசரி உடல் கட்டமைப்பு உள்ளவர்கள், உடல் எடை சராசரி.
 2. நல்ல ரத்த ஓட்ட சுழற்சியும், மலர்ந்த, சிவந்த முகமும், சருமமும் உடையவர்கள். வெதுவெதுப்பான உடலும், எண்ணை பசையுள்ள சருமமும் உடையவர்கள்.
 3. நடுத்தரமான தேகபலம் உடையவர்கள்
 4. பசியும், தாகமும் தீவிரமாக இருக்கும். உணவுப்பிரியர்கள்
 5. இவர்களுக்கு வெயில், சூடு ஆகாது.
 6. பெண் பித்த பிரகிருதிகளுக்கு, மாதவிடாய் சீராக இருக்கும். அதிக நாள் நீடிக்கும்.
 7. அறிவு, செயலாற்றும் திறன், செல்வம், எல்லாம் சராசரியாக இருக்கும்.
 8. நகம் மிருதுவாக இருக்கும்.
 9. பாசமுடையவர்கள், ஆனால் சீக்கிரமாகவே கோபம் வரும் முன்கோபிகள். உடனே சாந்தமும் ஆகிவிடுவார்கள்.
 10. நன்றாக தூங்குவார்கள்.
 11. நன்றாக, சீக்கிரம் பழகிவிடுவார்கள்.
 12. பித்த பிரகிருதிகள் முதலாளியாகவும் தலைவர்களாகும் இருப்பார்கள்.
 13. கலைகளில் – நாட்டியம், விளையாட்டுகள் இவற்றில் ஆர்வம் அதிகமிருக்கும்.
 14. மனோ ரீதியாக பித்த மனிதர்கள், சண்டைக்காரர்களாகவும் தீவிர எதிர்ப்பாளர்களாகவும் இருப்பார்கள். உறுதியான அபிப்பிராயங்களை உடையவர்கள்.
 15. இவர்களின் உடல் பலமும், வீரியமும் சாதாரண ‘லெவலில்’ இருந்தாலும் அதிக மனத்தின்மை உடையவர்கள்.
 16. தலைமுடி மென்மையாகவும், குறைந்தும் இருக்கும். செம்பட்டையாக இருக்கும். சீக்கிரம் நரைத்து விடும்.
 17. குரல் ‘நார்மலாக’ இருக்கும்.
 18. எளிதாக கற்றுக் கொள்வார்கள் கற்றதை அதிக காலம் நிலையாக மனதில் வைத்திருப்பார்கள்.
 19. பித்தமுடையவர்களுக்கு ஈறு (பல்) பாதிப்புகள் அதிகம் உண்டாகும். ஈறுகளில் ரத்தம் கசிவது சகஜம்.
 20. பாலுணர்வு சராசரியாக இருக்கும். சுகில தாது பலம் குறைவு. சருததிகள் குறைவாக அமையும்.
 21. எண்ணை செறிந்த, சூடான பதார்த்தங்கள் பிடிக்காது
 22. தைரியசாலிகள், படிப்பில் ஆர்வம் இருக்கும். அறிஞர்களாக காணப்படுவார்கள்
 23. மும்மலங்கள் ( மலம், சிறுநீர், வியர்வை) அதிக அளவில் வெளிப்படும் தன்மையுடையவர்கள். ஏ.சி.(கி.சி.) போட்ட அறைகளில் கூட வியர்ப்பார்கள்.
 24. வாய்ப்புண்கள் அதிகம் வரும்.
 25. நல்ல காற்றோட்டமான குளிர்ந்த இடம், பித்த பிரகிருதிகளுக்கு பிடிக்கும்.

26. பொறுமை குறைவு.

பித்த பிரக்ருதிகளுக்கு ஏற்ற உணவு

• குளிர்ச்சியான ஆகாரங்கள்:- அரிசி, கோதுமை, பார்லி

• சைவ உணவுகள்

• மூன்று சுவை ( இனிப்பு, துவர்ப்பு, கசப்பு) உள்ள ஆகாரங்கள்

• முட்டைக்கோஸ், காரட், பீன்ஸ், காளான், தேங்காய், வெள்ளரி, உருளைக்கிழங்கு, கீரைகள், காலிஃபிளவர், பீட்ரூட், பட்டாணி, சோயா.

• ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, நெல்லிக்காய், பேரிச்சை, திராட்சை, செர்ரி.

• பசும்பால், ஆட்டுப்பால், பால் சார்ந்த உணவுகள், பாதாம், தேங்காய் எண்ணெய் (அளவுடன்)

• கொத்தமல்லி, கறிவேப்பிலை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் போன்றவற்றை அதிகமாகச் சேர்க்கவும்.

தவிர்க்க வேண்டியவை:

புளிப்பு, உப்பு, காரச்சுவையுள்ள உணவுகள்.

பூண்டு, வெங்காயம், தேன், நல்லெண்ணெய், எலுமிச்சை, மாம்பழம் மிதமாகப் பயன்படுத்தலாம்.

வெயிலில் அலைதல், அதிகமாகக் கோபப்படுதல், மதுபானம் போன்றவை கூடாது.

பித்த மனிதர்களுக்கு வரும் நோய்கள்:-

இரத்தக் கொதிப்பு, சரும நோய்கள், கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, மூலம், வாய்ப்புண்.

நோயை தவிர்க்க:-

குளிர்ச்சியான இடங்களில் வசித்தல், தியானம், உடல்பயிற்சி, நீச்சல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மூலிகை தூபம்:-

1. குளித்த பின் மூலிகை தூபம் இடுவது நல்லது என்கிறது ஆயுர்வேதம்.

2. இதற்காக நாதஸ்வரம் போன்ற ஒரு உபகரணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. மூலிகைகளால் ஆன களிம்பு இந்த உபகரணத்தின் முன்னிலையில் வைக்கப்படுகிறது. இது காய்ந்த பின் நெருப்பு மூட்டப்படுகிறது. இதன் புகை குழாயின் வழியாக மூக்கினாலோ அல்லது வாயினாலோ நுகரப்படுகிறது. சரகர் கிட்டத்தட்ட 32 மூலிகைகளை இதற்காக குறிப்பிட்டு இருக்கிறார்.


Spread the love
error: Content is protected !!