பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும்.
வேகவைத்த பிரண்டையை உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி வற்றலாகச் செய்வார்கள்.
பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைபாக்கு அளவு தினமும் காலை, மாலை என இருவேளையும் (எட்டு நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்த மூலம் ஒழியும்.
பிரண்டையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல இருக்கிறது. இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல உற்சாகத்தையும், சுறுசுறுப்பு தன்மையையும் கொடுக்கிறது.
மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்படுவதுடன், அடி முதுகு பகுதி வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். இப்படியான காலங்களில் பிரண்டை தண்டுகளை துவையல், சட்னி, ரசம் போன்ற எந்த பக்குவத்திலாவது செய்து சாப்பிட நலம் பயக்கும்.
மேலும் தெரிந்து கொள்ள…