அன்னாசி சாக்லேட்

Spread the love

தேவை

அன்னாசி பழ வளையங்கள் – 1 பழத்திலிருந்து வெட்டியது

சாதாரண சாக்லேட் – 200 கிராம்

செய்முறை

வளையங்களை கால்பங்காக துண்டுகள் போடவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இன்னொரு பாத்திரத்தில் சாக்லேட்டை போட்டு உருக வைக்கவும்.

இரண்டு முள் ஸ்பூன்களை  உபயோகித்து கவனமாக அன்னாசி துண்டுகளை, கரைந்த சாக்லேட்டில் அமிழ்த்தவும்.

அன்னாசி துண்டுகளில் சாக்லேட் சமச்சீராக படிய வேண்டும். படிந்தவுடன் எடுத்து, எண்ணெய் / மெழுகு காகிதங்களில் வைத்து உலர வைக்கவும்.

அன்னாசி இனிப்பு வதக்கல்

தேவை

            வெட்டிய அன்னாசிப்பழம் 1

            கடலை மாவு –                         1 கப்

            தேங்காய் பால் –          1/2 கப்

            நெய் –                          2 டே. ஸ்பூன்

            உலர்ந்த திராட்சை –   25 கிராம்

            உப்பு –                                     தேவையான அளவு

            மசாலாப்பொடி, தனியாப் பொடி – 2 டீஸ்பூன்

            சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன், மிளகாய்வற்றல்

செய்முறை

பழத்துடன் கடலைமாவு, உப்பு இரண்டையும் கலந்து கொள்ளவும்.

மெல்லிய தீயில் நெய்யைச் சூடு செய்து மசாலாவை நெய்யில் போட்டு வதக்கிக் கொள்ளவும். சிறிது தண்ணீர் தெளித்துக் வதக்கிக் கொள்ளவும்.

மசாலாவிலிருந்து நெய் பிரிந்து வரும் பொழுது, தயாரித்து வைத்துள்ள பைனாப்பிளைப் போட்டு, 2 நிமிடம் வதக்கவும்.

2 கப் தண்ணீர் விட்டுப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.

பழம் வெந்தவுடன் தேங்காய்பாலை விடவும்.

2 அல்லது 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

திராட்சைப் பழத்தை நெய்யில் வறுத்துப் போடவும்.


Spread the love