அன்னாசி பழத்தின் மருத்துவக் குணங்கள்

Spread the love

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.  இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

ஒவ்வொரு வீட்டுச் சமையலிலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து வருகிறோம். இவற்றின் அளப்பரிய பயன்களை அறியாமலே  நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள் தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்தால் நோயின்றி வாழலாம்.

சிலர் பசியின்றி அவதிப்படுவார்கள் சாப்பிடத் தோணவில்லை என்பார்கள். மிகக் குறைந்த அனவு உண்வைக் கூட கடமைக்கு சாப்பிடுவதுபோல் சாப்பிடுவார்கள். இத்தகைய பசியின்மைக்கு காரணம் வாயுக் கோளாறுகளே இந்த வாய்வுக்களின் சீற்றத்தால் வயிற்றுப் பகுதியில் ஒரு வித மந்தத் தன்மை ஏற்படுகிறது.  இந்த நிலை மாறி நன்கு பசியைத் தூண்ட தினமும் உணவில் அன்னாசிப்பூவை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத்  தூண்டும்.

சிலருக்கு எத்தகைய மென்மையான உணவுகளை உட்கொண்டாலும்  செரிமானம் ஆகாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வர்களுக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இத்தகைய தொந்தரவுகள் வருவதுண்டு. இதனால் புளித்த ஏப்பம்  உருவாகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், மூலநோய்கள் உண்டாகக் கூட வாய்ப்புண்டு.

இந்த தொந்தரவு உள்ளவர்கள் எத்தகைய உணவை சமைக்கும் போதும் அதில் சிறிது அன்னாசிப் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு எளிதில்  ஜீரணமாகும். குடலின்  உட்புறச் சுவர்கள் பலப்படும் .

உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இயங்கச் செய்வது ஹார்மோன்களே. இந்த ஹார்மோன்கள் சரிவர சுரக்கச் செய்யும் தன்மை அன்னாசிப் பூவுற்கு உண்டு. இதனால் உலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். எனவே அன்னாசிப் பூவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.


Spread the love