உடல் அழியக் காரணம்

Spread the love

மனிதன் தான் உண்ணும் பொருத்தமில்லாத உணவுகளில், அளவுக்கு அதிகமாக உண்பது அல்லது அதிகமாக உறக்கம், உழைப்பு காரணத்தினால் மற்றும் சுய இன்பப் பழக்கம் அல்லது அளவுக்கு மீறிய உடலுறவு வேட்கையின் காரணத்தினால் மனிதனின் உடல் வெகுவிரைவில் எளிதாக அழியத் தொடங்குகிறது. இயற்கையாகவே கிடைக்கும் உணவுகளை சுத்தம் செய்து பசுமை மாறாத நிலையிலேயே சாப்பிடுவதை விட்டு விட்டு, சமைத்து உண்பதால் உடலும் உயிரும் அழிகிறது. மனிதனைத் தவிர மற்ற எந்த உயிரினமும் பூமியில் உணவைச் சமைத்து உண்பதில்லை. இரவு பகலாக உறக்கம் கெட்டு அதிக உடலுழைப்புக் கொள்வதால் நமது உடல் தூக்கமும், ஓய்வும் கிடைக்காமல் தளர்ச்சி அடைகிறது. அதுபோல, மாதர் போகம் மாதம் இருமுறை என்னும் மூத்தோர் சொல் கேளாமல் பாலுணர்வால் உந்தப்பட்டு அதிக நுகர்ச்சி பெறுதல் உடலில் ஜீவ அணுக்கள் வெளியேறி விடுவதால் நோய்க்கு நமது உடல் எளிதாக இரையாகிறது.


Spread the love