பெட்ரோல் ஆவி புற்று நோய் ஏற்படுத்துமா?

Spread the love

மோட்டார், கார் எஞ்ஜின்களிலிருந்தும் பெட்ரோல் பம்புகளிலிருந்தும் வெளிவரும் பெட்ரோல் ஆவி இரத்தப்புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எனக் கருதப்படுகிறது. பெட்ரோலில் காணப்படும் பென்சீன் எனப்படும் வேதியே இரத்தப்புற்றினை ஏற்படுத்தலாம் என லண்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர். சைமன் வுல்ஃப் (Dr. Simon Wolff) 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக இருபத்தியிரண்டு நாடுகளில் நடத்திய ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்துள்ளார்.

இதையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெட்ரோலில் பென்சீனின் அளவு 0.8 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதோடன்றி, பெட்ரோல் பம்புகளின் மேற்புறம், பெட்ரோல் ஆவி (Petrol fumes) களில் இருந்து வரக்கூடிய இடர்வரவுக் கூறுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் சிலவற்றையும் எழுதியும் வருகின்றனர்.

நெருக்கடியான சாலைகளில், எஞ்ஜினில் இருந்து எழுகின்ற இந்த ஆவி, பயணிகள் இருப்பிடத்தை நோக்கியே உறிஞ்சி இழுக்கப்படுவதால், சாலையில் உள்ள பென்சீன் அளவைக் காட்டிலும், வாகனங்களின் உட்புறம் பென்சீன் அளவு அதிகமாக இருக்கும்.

இந்த பெட்ரோல் ஆவிகளால் (petrol fumes) சிறுகுழந்தைகள் எளிதாக பாதிக்கப்படலாம், என்றாலும் இதன் விளைவு பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.


Spread the love