மாதவிடாய் பிரச்னை தீர..

Spread the love

மாதத்தில் ‘அந்த’ நாட்கள் வந்து விட்டாலே பெண்களுக்கு பிரச்னைதான். சிலருக்கு அதிக உதிரப்போக்கு இருக்கும். சிலருக்கு அடி வயிற்றில் வலி அதிகமாக இருக்கும்.. இப்படி பல பிரச்னைகள். இந்தக் கோளாறுகளுக்கு இயற்கை வைத்திய முறையில் சில தீர்வுகளை பார்ப்போம்..

அசோக மரத்தின் பட்டைகளை 90 கிராம் எடுத்து, 30 மி.லி. பால், 360 மி.லி. நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும். கலவை கிட்டத்தட்ட 90 கிராம் அளவுக்கு சுண்டி வந்ததும் இறக்கவும். இதை தினம் ஒன்று (அ) மூன்று முறை எடுத்துக் கொள்ளவும். மாதவிலக்கான பின் வரும் 4வது நாளிலிருந்து ஆரம்பித்து இந்த கஷாயத்தை, உதிரப்போக்கு நிற்கும் வரை கொடுக்கலாம். தினமும் இந்த கஷாயத்தை புதிதாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்பு ஒரு மேஜைக்கரண்டி கற்றாழை கதுப்புடன், ஒரு சிட்டிகை கருமிளகுப் பொடியும் சேர்த்து, உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வரவும். மேலும், இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். இது மாதவிலக்கை சீராக்கும்.

பெண்கள் நெல்லிக்காயை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் வரும் முன்பிருந்தே நெல்லிக்காயை எந்த வடிவத்திலாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழு மாதுளை இலைகளை எடுத்து ஏழு அரிசியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். இதை 30 நாட்கள் தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் அகலும். முளைக் கீரையின் வேர்களை அரிசி களைந்த நீருடன் உட்கொள்ளலாம்.


Spread the love