சைனஸ் உள்ளவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியவை

Spread the love

•  குளிர்காலத்தில் (பொதுவாகவே) தலைக்கு குளிக்க வேண்டாம்.

•  மது அருந்துதல், புகை பிடிப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.

•  அலர்ஜி உண்டாக்கும் தூசி, குப்பை, புண்கள், கொசுவை விரட்ட பயன்படும் வத்திகள்  முதலியவற்றை தவிர்க்கவும்.

•  இயற்கை உந்துதல்களான தும்மல், கண்ணீர், கொட்டாவி முதலியவற்றை அடக்க வேண்டாம்.

•  தகுந்த பாதுகாப்பு உடைகளின்றி குளிரில் வெளியே செல்ல வேண்டாம். மழையில் நனைய  வேண்டாம்.

•  கோபம், பரபரப்பு, கவலைகளை தவிர்க்கவும்.

•  பகலில் தூங்க வேண்டாம். தூக்கம் சைனஸை பாதிக்கலாம்.

•  சரியாக பொருந்தாத கனமான மூக்குக் கண்ணாடி, மூக்கை அழுத்தும்.

•   சைனுசைடீஸ் தாக்குதலின் போது, மூக்கு அழுத்தப்பட்டால் உபாதைகள் அதிகமாகும். சரியான இலகுவான மூக்கு கண்ணாடியை அணியவும்.

•   அலர்ஜி உண்டாக்கும் பொருட்களை கண்டுபிடித்து  அவற்றை தவிர்க்கவும். வாசனை திரவியங்களை   தவிர்க்கவும்.

•  சைனுசைடீஸ் தாக்குதல் இருக்கும் போது விமான பயணத்தை தவிர்க்கவும். காற்று அழுத்த  மாறுதல்களால், சைனஸ்கள் மேலும் அடைத்துக்  கொள்ளும்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!