ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டு பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட பல தென்கிழக்காசிய நாடுகளிலும், இது பயிராகிறது. பேரிக்காய். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்கா பழங்கள்அறுவடை செய்யப்படுகின்றன. பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. என்றாலும் ஆப்பிளில் இல்லாத வைட்டமின் ஏ இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் பல மருத்துவ குணங்கள் உடையது. சுவையான இதில் ஏ, H, H 2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்துக்கள் கணிசமாக உள்ளது.
உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்து, நோய் எதிர்ப்பு பொருட்கள்உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன.
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலில் ஏற்படும் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத ‘பாலிசாக்ரைடுகள்’ குடலில் ஏற்படும்புற்றுநோய்நச்சுகளைஅகற்றவல்லது.
100 கிராம் பழத்துண்டில் 58 சதவீதம் கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, மற்றும் கொழுப்பின் அளவும் கட்டுக்குள் இருக்கும். அதிக அளவு ‘வைட்டமின்-சி’ சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கும் மேலான ‘வைட்டமின்- சி’ உள்ளது. இதில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்றவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.
தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், மக்னீஸியம் போன்ற தாது உப்புகள் இதில் கணிசமான அளவில் உள்ளன. இது தவிர H———–குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோ -ஃப்ளோவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு:
வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் மிகவும் அவசியம். இவை இதில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.
இதயப் படபடப்பு நீங்க:
இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.