விஷயமுள்ள வேர்க்கடலை வெண்ணெய்

Spread the love

பொதுவாக வெண்ணையில் கொழுப்புகள் அதிகம் இருக்கும். இதனை பெரியவர்கள் தான் சாப்பிடக் கூடாது. ஆனால், குழந்தைகள் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதிலும் வேர்க்கடலை வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுத்தால், எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.


எனர்ஜியை அதிகரிக்கும்


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக அளவில் எனர்ஜியானது தேவைப்படும்.
அப்போது அவர்களுக்கு காலை வேளையில் பிரட்டில் வேர்க்கடலை வெண்ணெயை தடவி சாப்பிடக் கொடுத்தால், அவர்களுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

பார்வைக் கோளாறு

இன்றைய காலத்தில் சிறுவயதிலேயே குழந்தைகள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெயை கொடுத்தால், அவர்களின் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கலாம்.

வலுவான எலும்புகள்

வேர்க்கடலை வெண்ணெயில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால்,இதனை குழந்தைகளுக்கு கொடுக்க, அவர்களது எலும்புகள் வலுவுடன் இருக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் கொடுக்க வேண்டுமென்பதன் முக்கிய காரணம். குழந்தைகள் அதனைச் சாப்பிட்டால்,அவர்களது ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.
பசியைத் தூண்டும்

தற்போதைய குழந்தைகள் சரியாக சாப்பிடுவதே இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்கள் புலம்புவதுண்டு.


அத்தகைய பெற்றோர்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது. அது என்னவென்றால், குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெயைக் கொடுத்தால், அவர்களது பசியுணர்வு அதிகரித்து, பின் நன்கு சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

உடல் எடையை அதிகரிக்கும்.

உங்கள் குழந்தை எடை குறைவாக உள்ளார்களா? அப்படியானால், அவர்களுக்கு தினமும் உணவில் வேர்க்கடலை வெண்ணையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனால் அதில் உள்ள நல்ல கொழுப்பால், அவர்களது உடல் எடை அதிகரிக்கும். இருப்பினும்,அளவாக குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள்.

வயிற்றுப் பிரச்சினைகள்

வேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளின் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யும் குணம் கொண்டவை.
எனவே, குழந்தைகள் வயிற்றுப் பிரச்சினையால் அவஸ்தைப்படக் கூடாதெனில், வேர்க்கடலை வெண்ணெயை உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love