கருப்பையை தாக்கும் பி.சி.ஒ.எஸ் நோய்

Spread the love

பெண்கள் கருப்பை சார்ந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான் எனினும் பி.சி.ஒ.எஸ் என்னும் நோய் சற்றே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. கருப்பை விரிவாகி வெளிப்பகுதியில் சிறிய கட்டிகள் தோன்றுவதைத் தான் பி.சி.ஒ.எஸ்.நோய் என்கிறோம். உலகில் நான்கில் ஒரு பெண்ணுக்கு மேற்கூறிய பி.சி.ஒ.எஸ் எனப்படும் பாலிசிஸ்டிக் ஒவரியன் சிண்ட்ரோம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் நாட்டில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. பெண்களின் செக்ஸ ஹார்மோனாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் புரோஜெஸ்ட்ரோனும் சம நிலையற்று இருப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆனாலும் இக்கட்டிகள் தீங்கு விளைவிக்க கூடியவை அல்ல.

ஒரு கருப்பை உருவாக்கக்கூடிய தகுதியை அறிவிக்கும் வகையில் கர்ப்பப்பை தொடர்புடைய மாதவிடாய் சுழற்சி பெண்ணுக்கு தொடங்குகிறது. மாதவிடாய் சுழற்சியை 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்ய, சினைப்பைகளில் ஹார்மோன்கள் உற்பத்தி தொடங்குகிறது. இன்றைய இளம்பெண்களின் உணவுப்பழக்கம் காரணமாக சினைப்பைகளில் சிறு நீர்ப்பை உருவாகும் பிரச்சனை பாலி சிஸ்டிக் ஒவரிஸ் ஏற்படுகிறது. துரித உணவுகள், குளிர்பானங்களை அருந்தும் பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் இயல்பான இன்சுலினை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டு, உடலில் கார்போஹைட்ரேட் சத்து அதிகரிக்கிறது. இதனால் சினைப்பையில் நீர்ப்பைகள் உருவாகி ஹார்மோன்கள் சமநிலையற்று அமைகின்றன. இந்நோயினால் பாத்க்கப்பட்டவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று காணப்படும். கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். முகத்தில் முடி வளர்தல், உடல் பருமன் அடைதல், முடிகொட்டுதல் ஏற்படும். இந்நோய் பெண்களின் கருப்பையை தாக்குவதால் வெளியில் தெரிவதில்லை.

எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், மன அழுத்தம் பாதிப்பு ஏற்படும். இந்நோயினால் பாதிப்பு அடைந்தவர்களிடம் ஆண் ஹார்மோனான ஆன்டரஜனை சிறிதளவு உற்பத்தி காணப்படும். இதன் காரணமாக மேற்கூறிய நோயின் அறிகுறிகளுக்கு காரணமாக இருக்கும். அதிக அளவு இன்சுலின் சுரப்பிற்கு காரணமாகிவிடும். பி.சி.ஒ.எஸ் நோயானது இன்ன காரணத்தினால்தான் ஏற்படுகிறது என்று கூற முடியவில்லையெனினும் இது பரம்பரைத் தன்மையாக உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது. தாய் வழியிலோ, தந்தை வழியிலோ தோன்றலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திருமணமான பெண்கள் என்றால் குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றும்.

பி.சி.ஒ.எஸ் நோயின் விளைவுகள் என்ன?

கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றும்:

கர்ப்பத்தின் துவக்கத்திலேயே குறைந்தது மூன்று முறையாவது கரு தங்காமல் கலைந்துவிடும். கர்ப்பகாலத்தில் தோன்றும் சர்க்கரை நோயை அலட்சியம் செய்யக்கூடாது. தகுந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகக்கும் பாதிப்பு ஏற்படாது. குழந்தை பிறந்தபின் இந்த நோய் மறைந்துவிடும். ஒரு சிலருக்கு தொடர வாய்ப்புள்ளது.

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

கருவுற்ற காலத்திலிருந்து 20 வது வாரத்தில் திடீரென இரத்த அழுத்தம் உயர்வதால் கர்ப்பிணிப் பெண்ணின் சிறுநீரகங்கள், கல்லீரல், மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

இயற்கையான பிரசவத்திற்கு வாய்ப்புகள் குறைவு

பி.சி.ஒ.எஸ் நோய் பாதிப்பு உள்ள பெண்ணுக்கு இயற்கையான முறையில் பிரசவம் ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புகள் இல்லை. சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்போது தாய்க்கும் குழந்தைகக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வருமுன் காத்தல் நலம்

பெண்கள் திருமணத்திற்கு முன் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முடிகொட்டுதல் காணப்பட்டால் மகப்பேறு நிபுணரிடம் சென்று ஆலோசனைப் பெறுவது அவசியம். மருத்துவப் பரிசோதனையில் பி.சி.ஒ.எஸ் நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி உடனே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சரியாக திட்டமிடப்பட்ட உணவு, உடற்பயிற்சி மூலம் ஒரு சிலருக்கு குணம் கிடைக்கம். ஒரு சிலருக்கு மருந்துகள் தேவைப்படும். குழந்தைப்பேறுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் எனில் ஒவரிகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

உடற்பயிற்சியும் சரியான உணவு தேர்ந்தெடுத்தல் அவசியம்

இன்சுலின் மற்றும் ஆன்ட்ரஜன் அளவைக் குறைக்கின்ற பாலிஷ் செய்யப்பட்ட கார்போ ஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இறைச்சி, கொட்டைகள், தானியங்கள், உலர் பருப்புகள், முட்டை, பாலாடைக் கட்டி, ஆப்பிள், ஆரஞ்சு, பச்சைக் கீரை வகைகள், முட்டைக் கோஸ், தக்காளி போன்ற அடர்ந்த நிறங்கள் கொண்ட காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கால்வீக்கம் அல்லது எடிமாவினைக்குறைக்க பார்லி தண்ணீர் அருந்தி வரலாம். துளசி கஷாயம் அல்லது மஞ்சள் சேர்த்துக் கொண்ட பாலை அருந்தும்பொழுது ஜலதோஷம், இருமலுக்கு பலனளிக்கும். மிளகு மற்றும் சீரகப் பவுடர், அரிசி, மற்றும் நெய் கலந்து சாப்பிடுவது செரிமானத்திற்கு கைகொடுக்கும். ஓம இலையை நன்கு கழுவிய பின்பு சாப்பிட்டு வர செரிமானக் கோளாறை சரி செய்யும்.

பி.சி.ஒ.எஸ் நோயிலிருந்து நிவாரணம் பெற சில வழிகள்

ரோஜா இதழ்களை நன்றாக நீர்விட்டு கழுவி சுத்தம் செய்த பின்பு புத்தம் புதிய தயிரில் தோய்த்து காலையில் முதல் வேளையாக சாப்பிட்டுவரலாம். உங்கள் உணவுப் பட்டியலில் தினசரி குறைந்தபட்சம் ஒரு மேஜைக் கரண்டி ஆளிவிதை (பிளாக்ஸ் சீட்ஸ்) சாப்பிடலாம்.

இலவங்கப் பட்டையை பொடி செய்து உட்கொண்டு வரலாம். இதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இயலும். சீரான உடல் எடையை பராமரிக்க இயலும். பதப்படுத்தப்பட்ட டின்,பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்துவிடுவது நல்லது.

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கவும். சராசரியாக ஐந்து கிலோ வரை எடை குறைந்தால் கூட ஹார்மோன்களின் சமநிலைப் படுத்தவும், மாதவிலக்கு சுழற்சி சரியாக அமையவும் உதவும். நடைபபயிற்சி, மெல்லிய ஓட்டம், எளிய உடற்பயிற்சி செய்துவர உடல் பருமன் குறையும். சிகரெட் பிடிக்கும் பெண்கள் எனில் அவர்களுக்கு ஆன்ட்ரஜன் ஹார்மோன் அதிக அளவு அமைந்து பி.சி.ஒ.எஸ் நோய்க்கு விரைவில் ஆளாவார்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love