அழகு உலகத்தை பொறுத்த வரைக்கும் இன்றும் சில பேஸ் பேக் காலத்தால், அழியாமல் வந்திருக்கின்றது. அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியது பாசிப்பயிறு பேஸ் பேக்.. இந்த பாசி பயிறுடன் மற்றொறு பொருளை சேர்க்கும் போது அது நமக்கு இரட்டிப்பு பலனை தரும்… இதன் மூலம் பொலிவு இல்லாமல் இருக்கும் போதும், முகத்தில் முகப்பரு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போதும் பாசிப்பயிறு பேஸ் பேக் உதவியாக இருக்கும்…
ஒரு டீஸ்பூன் பயிறு மாவு, கடலை மாவு, தயிர், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இவையெல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வர, வெயிலால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பொலிவடையும். அதோடு சருமத்திற்கு ஈரப்பதமும் கிடைக்கும்…
வயதானதும் சில பேரின் முகத்தில் சிறிய குழிகள் தென்படும்… அதற்கு பாசிப்பயிறு மாவில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து அதை முகத்தில் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவி வந்தால், சருமம் மென்மையாவதுடன், நாட்களாக சிறிய துவாரங்கள் மறைந்து, முகம் மிளிரும்.
முகப்பரு உள்ளவர்கள், அரை டீஸ்பூன் பாசி பயிறு மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து, பரு இருக்கும் இடத்தில் பூசி உலர்ந்ததும் கழுவவும், வறண்ட சருமம் உள்ளவர்கள் எலுமிச்சைசாற்றுக்கு பதிலாக, பால் கலந்து பயன்படுத்தலாம்…அடுத்து இரண்டு டீஸ்பூன் பாசி பயிறு மாவு, எலுமிச்சை சாற்றை விட்டு அதை பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர, இழந்த முக பொலிவு கிடைப்பதோடு, முகம் நிறம் மாறும்..
சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், நுண்கிருமிகள் இதை போக்குவது மட்டுமில்லாமல் முகம் மிகவும் மென்மையாக வைக்கவும், பாசிபயிரில் மற்றோர் பேஸ் பேக் இருக்கின்றது.. அதற்கு இரண்டு டீஸ்பூன் பாசிப்பயிறு மாவு, அரை டீஸ்பூன் தேன், பால் தேவையான அளவு… இவை மூன்றையும் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்…