இந்த சத்தான கீரையை வாரம் ஒரு முறையாவது சாப்பிடுங்க…!

Spread the love

இரத்த அழுத்தத்தை தடுத்து இதயத்தை காத்து, உடலிற்கு பல வகையில்நன்மையை கொடுக்கும் பசலை கீரையை மிகவும் விரும்பி சாப்பிட்டு வாருங்கள். பசலை கீரையில்இருக்கும் கரோட்டீனாய்டு, உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க கூடியதாக இருக்கின்றது.இதனால் பசலை கீரையை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளுக்கு Good byeசொல்லலாம்.. மேலும் இது இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த கூடியதாக இருக்கின்றது.


இதில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் கனிம சத்துகள், இரத்த ஓட்டத்தைசீராக்கி, இரத்த சோகை வராமல் பாதுகாக்கின்றது. இந்த கீரையில் இருக்கும் நார்சத்து,உடல் உஷ்ணத்தை நீக்கும். நீரேற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். கீரை வகைகள் பொதுவாகநார்சத்து நிறைந்து காணப்படும். இது உடலிற்கு அத்தியாவசிய ஊட்டசத்து. இது மலச்சிக்கலைகுணப்படுத்துவதோடு தோல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

பசலை கீரையில் ஆண்டிஆக்சிடன்ட் இருக்கின்றது. இது புற்றுநோய் செல்களை அழிக்கின்ற ஆற்றல்கொண்டிருக்கின்றது. அதோடு வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ நிறைந்துள்ளது. இது தொற்றுகளில்ஏற்பட கூடிய, குறிப்பாக சுவாச தொற்று, சிறுநீரக பாதையில் தேங்கியிருக்கும்தொற்றுகள் போன்றவற்றை அழித்து வெளியேற்றுகிறது.


இதய கோளாறு உள்ளவர்கள் அவசியமாக, இந்த பசலை கீரையை சாப்பிட்டு வரலாம்.இதில் இரும்புசத்து குறைவில்லாமல் நமக்கு கிடைக்கும். இதனால் சிவப்பு அணுக்களின்எண்ணிக்கை அதிகரித்து இரத்தம் பலப்படும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இரத்தசோகை வராமல் தடுக்கலாம். பசலை கீரையில் கலோரியும், கார்போஹைட்ரேட்டும் மிகவும்குறைவு, அதனால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் உங்கள் உணவில் பசலையைசேர்த்துகொள்ளுங்கள். மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிற செலினியம்,நியாசின் மற்றும் ஒமேகா-3 Fatty ஆசிட்டும் இதில் நிறைந்திருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=UpdqQPg7cls


Spread the love