பொதுவா மருந்து மாத்திரையால கூட குண படுத்த முடியாத பெரிய வியாதியே மன அழுத்தம் தான்.. விவரம் தெரிஞ்சவங்க , பெரியவங்க இவங்கல்லாம் சாப்புட்ற உணவு , தியானம் இதனால மன அழுத்தத்தை சரி செய்வாங்க… ஆனா சின்ன குழந்தைங்க என்ன செய்யும்… இத புரிஞ்சிக்காம பெத்தவங்க கடுப்பாகி திட்றதும், அதுக்கு அப்புறம் போய்ட்டு கொஞ்சி சமாதான படுத்துறதும் வழக்காம இருக்கு.. ஆனா இதனால மட்டும் அவங்களோட மன நிலை பீஸ் புல்லா இருக்காது… அதுக்கு என்ன பண்ணலாம்னு இப்போ தெரிஞ்சிக்கலாம்… நீங்களும் கொஞ்ச நேரம் கொழந்த பருவத்துக்கு போய் பாருங்க…
குழந்தைகளிடம் உங்களது ஆசைகளை திணிக்க கூடாது.. அவர்களுக்கு என்ன படிக்க விருப்பமோ அதை படிக்க செய்யுங்கள்… விடுமுறை நாட்களில் , சிறப்பு வகுப்புகளில் சேர்த்து விட்டு, பிஞ்சுகளின் மனதை கருக விட கூடாது… அந்த நாட்களில் அவர்கள் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிவதுதான் , பின் காலத்தில் அவர்கள் அந்த நினைவுகளை ருசிக்க முடியும்… குழந்தைகளுக்கு ஒரு விருப்பத்தை ஏற்படுத்திய பின்பு அதில் சேர்த்தால் நல்ல பயன் கிடைக்கும்… படி படி என்று போட்டு கொள்வதை விட , நல்லா படித்தால் அந்த கலெக்டர் மாதிரி சிவப்பு விளக்கு வாய்த்த காரில் வரலாம், பாதுகாப்புக்கு போலீஸ் அங்கிளும் வருவார்கள் என்று ஆசை காட்டலாம்… அதை போல் , டிவி பார்ப்பது பெரிய குற்றம் கிடையாது.. ஆனால், உங்கள் கண்காணிப்பில் குறிப்பிட்ட நேரத்தில் அதற்க்கு அனுமதிக்கலாம்… குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறியும் போது, அவர்களுக்கு மனம் லேசாகும்.
நல்லதை உடனே பாராட்டுங்கள் … தவறு செய்திருந்தால் இனிமேல் இப்படி செய்தால் நான் வருத்தப்படுவேன் என்று கூறி பாருங்கள், அது குழந்தைகளின் மனதில் நன்கு படிந்து, இனி தவறு செய்ய கூடாது என்ற நினைப்பு ஏற்படும்… இல்லறமும் நல்லறமாகும்…
ஆயுர்வேதம்.காம்