சந்தையில் எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளிப் பழம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. அதே அளவு பப்பாளிவிதையும் மருத்துவக் குணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? பப்பாளி விதை விஷத் தன்மையுடையது. எனினும் முறைப்படி பயன்படுத்தினால் இதுவும் உணவுப் பொருளாகும்.
பப்பாளி விதையானது குடலில் உள்ள புழு, பூச்சிகளைக் கொல்வதில் தலை சிறந்தது. அதிக அளவு பப்பாளி விதைகளை சாப்பிடுவதும்நல்லதல்ல. என்றாலும், ஒரு சில உடல் பிரச்சனைகளுக்கு ஒரு மனிதனுக்கு எந்த அளவு பப்பாளி விதை உட்கொள்ள சரியாக இருக்கும் என்பதை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிக அளவு உட்கொள்ள விஷமாகி விடும். பப்பாளி விதையானது சிறிய அளவுக்கு உட்கொள்ள, ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மிகுந்த பலனைத் தரும். பப்பாளி விதையில் அதிக அளவு புரதம், நார்ச் சத்து, கொழுப்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன.
குடல் புழுக்களை கொல்லும் திறன் கொண்டது.
வயிற்றின் குடல் பகுதியில் வளரும் புழு, பூச்சிகளை, கிருமிகளைக் கொன்று மலம் வழியாக வெளியேற்றுகிறது. ஆப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளில் பப்பாளி விதையிலிருந்து சாறு எடுத்து பருகுகிறார்கள். இது நல்ல பலனைத் தருகிறதாம். ஒரு சில நாடுகளில் விதைகளுடன்சேர்த்தே பப்பாளிப் பழத்தை உணவாக உட்கொள்கிறார்கள். வயிற்றுப் பூச்சி, குடல் புழுக்கள் வராமல் தடுப்பதற்கு ஆரம்பத்திலேயே இவ்வாறு விதைகளுடன் பழத்தைச் சாப்பிடுகிறார்கள்.
கல்லீரல் மற்றும் சிறு நீரகத்தை பாதிகாக்கிறது.
கல்லீரல் மற்றும் சீறுநீரகத்தை பல வித சிக்கல்களில் இருந்தும் பாதுகாக்கும் மருத்துவ பண்புகளை பப்பாளி விதை கொண்டுள்ளது. லிவர் ஸ்ரோசீஸ் என்ற கல்லீரல் நோயைக் குணப்படுத்துவதில் அவசியமானது. பப்பாளியின் விதை மூலம் தயாரிக்கப்படும் மருந்து வீரியமுள்ள ஒன்றாகும்.
புற்று நோய்க்கு மருந்தாக உள்ளது.
புற்று நோயினை உருவாக்கும் செல்களை அழிக்கும் ஆண்டி ஆக்ஸிட்ண்ட் வேதியியல் பொருட்கள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக பப்பாளி விதை புற்று நோய் வருவதை தடுக்கிறது.
இயற்கை தரும் கருத்தடை மருந்து பப்பாளி விதை
இயற்கை முறையில் பக்க விளைவுகள் ஏதுவுமில்லாத கருத்தடை மருந்தாக பப்பாளி விதை பயன்படுகிறது. கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கிறது. பப்பாளி விதையை உட்கொள்ளும் சமயங்களில், உடலுறவில் வெளியிடும் ஆணின் விந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. கருத்தரிப்பை தடுக்கும் முறைக்கும் எத்தனை நாட்கள், எந்த அளவில் எடுத்து சாப்பிட வேண்டும் என்பதைப் பொறுத்து கருத்தரிக்க இயலாமல் செய்ய இயலுகிறது. அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது கருத்தரிப்பு முழுக்க முழுக்க அமையாமலே போய்விடும் வல்லமை கொண்டது. ஆனால், 30, 35 நாட்களுக்குள் பழைய நிலைக்கு (பப்பாளி விதையை உட்கொள்வதை நிறுத்தி விட்டால்) வந்து விடும்.
சருமத்திற்கும் உகந்தது பப்பாளி விதை
சருமம் மிளிரவும், அழகு பெறவும், வெளிக் காயங்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் பப்பாளி விதைக்கு உள்ளது. பழங்காலத்தில் பப்பாளி விதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொடியானது, உடலின் வெளிக் காயங்களுக்கு பயன்பட்டது. பப்பாளி விதையை கொதிக்க வைத்து எடுக்கப்படும் கலவை மூலம் வெளிக் காயங்களை கழுவ பயன்படுத்தப்பட்டது, இதனால் விரைவில் குணம் பெறவும் உதவுகிறது. பப்பாளி விதை முகத்திற்கும், தலை முடிக்கும் அழகுபடுத்த உதவும் அழகு சாதனப் பொருட்களில் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. அல்சர் வராமல் தடுக்கும் ஆற்றலும் பப்பாளி விதைக்கு உண்டு.
உலர்ந்த பப்பாளி விதையை அப்படியே சாப்பிடுவது என்பது காரமாகவும், காட்டமாகவும் கரு மிளகு போல இருக்கும். பப்பாளி விதையுடன் தேன் கலந்து தான் உட்கொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாள் பப்பாளி விதை பொடியை வாரத்திற்கு என, தொடர்ந்து ஒரு சில மாதங்கள் சாப்பிட்டு வர குடல் பூச்சிகள், கிருமிகள் தொந்தரவு குணமாகும்.
யார் பப்பாளி விதையை சாப்பிடக் கூடாது?
பப்பாளியில் பாப்பெயின் என்ற வேதிப் பொருள் அதிக அளவு உள்ளது. இந்த வேதிப் பொருளால் அலர்ஜி ஏற்படுபவர் எனில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுதல் அவசியமாகும். பப்பாளி விதை கர்ப்பத்தை கலைக்கும் என்பதால், கர்ப்பம் தரித்த அல்லது கர்ப்பம் தரிக்க விரும்புபவர்கள் இதனை முற்றிலும் தவிர்த்து விடுவது அவசியமாகும்.
உலர்ந்த பப்பாளி விதைகளை சமையலுக்கு தயார் செய்வது எப்படி?
பப்பாளி விதைகளை எடுத்து நீர் விட்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். விதைகளில் ஒட்டியுள்ள சதை பகுதிகளை முழுவதும் நீக்கி மிருதுவான காட்டன் துணியில் அந்த விதைகளைப் பரப்பி, ஈரத்தை உறிஞ்சும் வண்ணம் செய்த பின்பு சூரிய ஒளியில் நன்றாக நீர் வற்றும் வரை காய விடுங்கள். மெல்லிய சிறிய வாளியில் சலிக்கும் வண்ணம் பப்பாளி விதைகளை பொடியாக்கி, சிறிதளவு உப்புச் சேர்த்து, இதனை சாலட் மேல் (மிளகுக்கு பதிலாக) தூவவும். பப்பாளிப் பொடியை முதலில் ½ தேக்கரண்டி அளவு ஆரம்பித்து ¾ வரை வந்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.