ஆண்களின் முகப்பொலிவிற்க்கு இந்த இலை செய்யும் மாயம்….

Spread the love

ஆண்களின் கடினமான சருமத்திற்க்கு பல கிரீம் பரிந்துரைக்கப்படுகிறது. அது எந்த அளவிற்க்கு தீர்வை தருகின்றது என பயன்படுத்தினவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் பப்பாளி இலையோ நிச்சயமாக பயனுள்ளதாகதான் இருக்கும். பப்பாளி இலையில் இருக்கும் கார்பைன் முகத்தில் நுண்னுயிர்கள் சேர்வதை தடுத்து முகத்தின் பளபளப்பையும் அதிகமாக்குகிறது.
தனக்கு முகத்தில் பிரச்சனைகள் இருப்பதை உணர கூடிய ஆண்கள், பப்பாளி இலையை அரைத்து, குடித்து வந்தால், முகத்தில் ஏற்பட்டிருக்கும் downess  நீங்கி முகம் புத்துணர்ச்சி அடையும். இது உடல் ஆரோக்கியத்திற்க்கும் மிகவும் நல்லது. எனவே இது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் பப்பாளி சாற்றை குடிப்பதால் ஆண்களுக்கு முகத்தில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள் மறையும். எண்ணெய் பசை அதிகமாக சுரக்க கூடிய ஆண்களுக்கு, முகப்பரு கணக்கில்லாமல் காணப்படும்.அதற்கு பப்பாளி இலையை மைய அறைத்து அதை வடிகட்டி வைக்க வேண்டும். அதில் தேவையான அளவை முகத்தில் பூசி ஒரு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வர, முகப்பரு மறைய தொடங்கும் பரு முற்றிலுமாக குணமாகும் வரைக்கும். இதை அடிக்கடி செய்து வரலாம்.

சிறிய வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்க கூடியது முகச்சுருக்கம் தான். அதற்கு, துளுரான பப்பாளி இலையை பறித்து தேவையான அளவிற்கு, சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீரை பாதியாக சுண்டியதும், அதை இறக்கி ஆற விட்டு, குடித்து வந்தால், முக சுருக்கம் நீங்கி, முகம் பழைய நிலைக்கு மாறும். 


Spread the love